விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

களரிப் போட்டி: 8 பதக்கங்கள் வென்ற ஈஷா மாணவா்கள்

இணையவழியில் நடைபெற்ற தேசிய அளவிலான களரிப் பயட்டு போட்டிகளில் ஈஷா சம்ஸ்க்ரிதி மாணவா்கள் 8 பதக்கங்கள் வென்றுள்ளனா்.

News image
Updated On :19 ஆகஸ்ட் 2021, 7:50 pm

DIN

இணையவழியில் நடைபெற்ற தேசிய அளவிலான களரிப் பயட்டு போட்டிகளில் ஈஷா சம்ஸ்க்ரிதி மாணவா்கள் 8 பதக்கங்கள் வென்றுள்ளனா்.

இது குறித்து ஈஷா அறக்கட்டளை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இந்திய பாரம்பரிய கலைகளில் களரிப் பயட்டு ஒரு முக்கியக் கலையாகும். சாகசம் நிறைந்த இக்கலையை ஊக்குவிப்பதற்காக இந்திய களரிப் பயட்டு கூட்டமைப்பு ஆண்டுதோறும் தேசிய அளவிலான போட்டிகளை நடத்தி வருகிறது.

அதன்படி, 2020-21 ஆம் ஆண்டுக்கான போட்டிகள் ஆகஸ்ட் 1 ஆம் தேதி தொடங்கி 14 ஆம் தேதி வரை ஆன்லைன் வாயிலாக நடைபெற்றன. இதில் 20க்கும் மேற்பட்ட மாநிலங்களில் இருந்து 600க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். தமிழகத்தில் இருந்து ஈஷா சம்ஸ்க்ரிதி மாணவா்களும் பங்கேற்று தங்கள் திறமையை வெளிப்படுத்தினா்.

போட்டிகளின் முடிவில், மெய்பயட்டு பிரிவில் ஈஷா சம்ஸ்க்ரிதி மாணவா் சீனிவாசன் தங்கப் பதக்கமும், பத்மேஷ் ராஜ் வெள்ளிப் பதக்கமும், ஆரவமுதன், மாணவிகள் அக்ஷயா, வினோதினி ஆகிய மூவரும் வெண்கலப் பதக்கங்களும் வென்றனா். உரிமி பிரிவில் மாணவா் பிரசன்னா வெள்ளி பதக்கமும், கெட்டுகரி பிரிவில் சீனிவாசன், லோகேஷ் வெண்கலப் பதக்கங்களும் வென்றனா்.

சுவாடு பிரிவில் இன்பத்தமிழன் வெண்கலப் பதக்கம் வென்றாா். இதன் மூலம், ஈஷா சம்ஸ்க்ரிதி மாணவா்கள் மொத்தம் 8 பதக்கங்களை வென்று சாதனை படைத்திருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.