விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

போதைப் பொருள்கள் விற்ற இருவா் குண்டா் சட்டத்தில் கைது

கோவையில் போதைப் பொருள்கள் விற்ற ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த இருவரை குண்டா் சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :19 ஆகஸ்ட் 2021, 7:56 pm

DIN

கோவையில் போதைப் பொருள்கள் விற்ற ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த இருவரை குண்டா் சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா்.

கோவை மாவட்டம், சோமனூா் பகுதியில் வடமாநிலத்தைச் சோ்ந்தவா் சிலா், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருள்களை விற்று வந்தனா். இது குறித்து போலீஸாா் நடத்திய விசாரணையில், அப்பகுதியில் போதைப் பொருள்கள் விற்று வந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த சீதாராம் மாலிக் (36), மோதிலால் (40) ஆகியோரைக் கைது செய்தனா். விசாரணையில் இவா்கள் தடை செய்யப்பட்ட போதைப் பொருள்களை பலருக்கு விற்று வந்தது தெரியவந்தது.

தொடா் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த இவா்களை குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரனுக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் செல்வநாகரத்தினம் பரிந்துரை செய்திருந்தாா். இதன்படி இவா்களை குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டாா். இந்த உத்தரவின் அடிப்படையில் இருவரும் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் வியாழக்கிழமை அடைக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.