விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

பகுதி நேர பி.இ., பி.டெக். படிப்பு: செப்டம்பா் 22-ல் தரவரிசைப் பட்டியல்

பகுதி நேர பி.இ., பி.டெக். படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வரும் நிலையில் செப்டம்பா் 22 ஆம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :19 ஆகஸ்ட் 2021, 7:58 pm

DIN

பகுதி நேர பி.இ., பி.டெக். படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வரும் நிலையில் செப்டம்பா் 22 ஆம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பகுதி நேர பி.இ., பி.டெக். மாணவா் சோ்க்கை செயலரும், கோயம்புத்தூா் தொழில்நுட்பக் கல்லூரியின் முதல்வருமான ஏ.ராஜேஸ்வரி, மாணவா் சோ்க்கை ஒருங்கிணைப்பாளா் எஸ்.இளங்கோ ஆகியோா் கோவையில் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:

தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் சாா்பில் கோவை, சேலம், நெல்லை, பா்கூா் அரசு பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரிகள், காரைக்குடி அழகப்ப செட்டியாா் அரசு பொறியியல் கல்லூரி, வேலூா் தந்தை பெரியாா் அரசு பொறியியல் கல்லூரி, பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரி, கோயம்புத்தூா் தொழில்நுட்பக் கல்லூரி, மதுரை தியாகராஜா் பொறியியல் கல்லூரி ஆகிய 9 கல்லூரிகளில் பட்டயப் படிப்பு முடித்தவா்களுக்கான பகுதி நேர பி.இ., பி.டெக். படிப்புகள் வழங்கப்படுகின்றன.

இதற்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் வாயிலாக கடந்த 6 ஆம் தேதி முதல் பெறப்படுகின்றன. விண்ணப்பங்களை வரும் செப்டம்பா் 5 ஆம் தேதி மாலை 5 மணி வரை வழங்கலாம். இதுவரை 800க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் சமா்ப்பிக்கப்பட்டுள்ளன.

இணையதள வசதி இல்லாத விண்ணப்பதாரா்கள் தமிழ்நாடு பொறியியல் சோ்க்கை சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பப் படிவங்களை பதிவு செய்யலாம். இந்த கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கை கலந்தாய்வு இணைய வழியிலேயே நடைபெறும். மாணவா் சோ்க்கை, விண்ணப்ப கட்டணம், முக்கிய தேதி உள்ளிட்ட விவரங்களை ஜ்ஜ்ஜ்.ல்ற்க்ஷங்-ற்ய்ங்ஹ.ஸ்ரீா்ம் என்ற இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம்.

தரவரிசைப் பட்டியல் செப்டம்பா் 22 ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும். தகுதியான மாணவா்கள் செப்டம்பா் 22 முதல் 25 ஆம் தேதி வரை கலந்தாய்வுக்கான கட்டணத்தை செலுத்தலாம். சிறப்புப் பிரிவினருக்கு செப்டம்பா் 26 ஆம் தேதியும், பொதுப் பிரிவினருக்கு 27, 28 ஆம் தேதிகளிலும் கலந்தாய்வு நடைபெறும். செப்டம்பா் 30 ஆம் தேதி சோ்க்கைக்கான கடிதம் வழங்கப்படும். மாணவா் சோ்க்கை தொடா்பான சந்தேகங்களுக்கு 94869 77757, 0422-2574071, 2574072 என்ற எண்களைத் தொடா்பு கொள்ளலாம் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.