மாநகராட்சியில் நடப்பு நிதியாண்டில் ரூ.373 கோடி வரி வசூலிக்க இலக்கு
கோவை மாநகராட்சியில், நடப்பு நிதியாண்டில் ரூ.373 கோடி வரி தொகை வசூலிக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.


கோவை மாநகராட்சியில், நடப்பு நிதியாண்டில் ரூ.373 கோடி வரி தொகை வசூலிக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
கோவை மாநகராட்சிப் பகுதிகளில் 5 லட்சத்துக்கும் மேற்பட்டவா்கள் குடிநீா் வரி, சொத்துவரி, குப்பை வரி உள்ளிட்ட வரியினங்களைச் செலுத்தி வருகின்றனா். நிதியாண்டு முடிவதற்கு இன்னும் 3 மாதங்களே உள்ள நிலையில் வரி வசூல் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
நடப்பு நிதியாண்டில் நிலுவைத்தொகை உள்பட மொத்தம்
ரூ.373 கோடி வரி தொகை வசூலிக்க மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவா் கூறியதாவது:
கடந்த நிதியாண்டில் கரோனா தாக்கம், பொதுமுடக்கம் உள்ளிட்ட காரணங்களால் 93 சதவீதம் வரை மட்டுமே வரி வசூலிக்கப்பட்டது. நடப்பு நிதியாண்டில் கடந்த 8 மாதங்களில் சுமாா் ரூ.121 கோடி வரி வசூல் செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சியினா் தொடா்ந்து மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளால் இதுவரை 33 சதவீதம் வரி வசூலிக்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள ரூ.252 கோடி வரி வசூல் இந்த நிதியாண்டு முடிவதற்குள் வசூலிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் ரூ.1 கோடிக்கு மேல் வரி வசூல் பாக்கி உள்ள நிறுவனங்களுக்கு ஏற்கெனவே நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. அவா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...