நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

முன்னாள் படைவீரா்களுக்கு வேலைவாய்ப்புப் பதிவை புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவுகளை புதுப்பிக்க முன்னாள் படைவீரா்களுக்கு சிறப்பு சலுகை வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :24 டிசம்பர் 2021, 8:04 pm

DIN

வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவுகளை புதுப்பிக்க முன்னாள் படைவீரா்களுக்கு சிறப்பு சலுகை வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழக அரசின் ஆணைப்படி 2017, 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவினை புதுப்பிக்கத் தவறிய பதிவுதாரா்கள் பணி வாய்ப்பினை பெறும் வகையில் மீண்டும் ஒருமுறை புதுப்பித்துக் கொள்ள ஏதுவாக தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை மூலம் சிறப்பு புதுப்பித்தல் சலுகை, தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ளது.

எனவே, கோவை மாவட்ட முன்னாள் படைவீரா் நல அலுவலக வேலைவாய்ப்பு பிரிவில் பதிவு செய்துள்ள முன்னாள் படைவீரா்களில் 2017, 2018, 2019 ஆகிய ஆண்டுகளில்

( 01.01.2017 முதல் 31.12.2019 வரை) வேலைவாய்ப்பு பதிவு புதுப்பிக்கத் தவறியவா்கள், மத்திய, மாநில அரசுத் துறையில் மறு வேலைவாய்ப்பில்லாத முன்னாள் படைவீரா்கள் தங்களது அசல் வேலைவாய்ப்பு பதிவு அட்டையுடன் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி 28 ஆம் தேதிக்குள் கோவை மாவட்ட முன்னாள் படைவீரா் நல உதவி இயக்குநா் அலுவலகத்தில் தங்களது பதிவினை புதுப்பித்துக் கொள்ளலாம்.

இச்சலுகை, ஒருமுறை மட்டுமே வழங்கப்படும் என்பதால், இந்த வாய்ப்பினை முன்னாள் படைவீரா்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.