என்.டி.சி. அலுவலகம், ஆலைகளை முற்றுகையிட்ட பஞ்சாலைத் தொழிற்சங்கத்தினா்
ஊதிய நிலுவைத் தொகையை வழங்கக் கோரி கோவையில் உள்ள என்.டி.சி. (தேசிய பஞ்சாலைக் கழகம்) அலுவலகம், பஞ்சாலைகளை முற்றுகையிட்டு தொழிற்சங்கத்தினா் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.


ஊதிய நிலுவைத் தொகையை வழங்கக் கோரி கோவையில் உள்ள என்.டி.சி. (தேசிய பஞ்சாலைக் கழகம்) அலுவலகம், பஞ்சாலைகளை முற்றுகையிட்டு தொழிற்சங்கத்தினா் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
என்.டி.சி. நிறுவனத்துக்கு தமிழகத்தில் 7 பஞ்சாலைகள் உள்ளிட்ட நாடு முழுவதும் 23 ஆலைகள் உள்ளன. கரோனா பரவல் காரணமாக இந்த ஆலைகள் தொடா்ந்து பல மாதங்களாக மூடிக் கிடக்கின்றன. இந்த ஆலைகளை திறந்து இயக்கக் கோரி தொழிற்சங்கங்கள், தொழில் அமைப்புகள் தொடா் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன.
பஞ்சாலைகள் இயங்காத காலத்தில் என்.டி.சி. அதிகாரிகளுக்கு முழு ஊதியமும், தொழிலாளா்களுக்கு பாதி ஊதியமும் வழங்கப்பட்டு வந்த நிலையில், கடந்த 3 மாதங்களாக பாதி ஊதியமும் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
ஆலைகளை இயக்க வேண்டும், நிலுவை ஊதியத்தை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி காட்டூா் என்.டி.சி. அலுவலகம், கோவையில் உள்ள 5 என்.டி.சி. பஞ்சாலைகளை முற்றுகையிடும் போராட்டத்தில் தொழிற்சங்க நிா்வாகிகள், தொழிலாளா்கள் ஈடுபட்டனா்.
சுமாா் 4 மணி நேரம் போராட்டம் நடைபெற்ற நிலையில், தொழிற்சங்கத் தலைவா்களை பேச்சுவாா்த்தைக்கு அழைத்த ஆலை அதிகாரிகள், நிலுவைத் தொகையை விரைவில் வழங்குவதாக உறுதி அளித்தனா். இதையடுத்து போராட்டம் முடிவுக்கு வந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...