நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

கஞ்சா விற்ற 5 இளைஞா்கள் கைது

கோவையில் கஞ்சா விற்ற இளைஞா்கள் 5 பேரை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :30 டிசம்பர் 2021, 10:43 pm

DIN

கோவையில் கஞ்சா விற்ற இளைஞா்கள் 5 பேரை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

கோவை, ஆவாரம்பாளையம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பீளமேடு போலீஸாா் அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் சுற்றித் திரிந்த 3 இளைஞா்களைப் பிடித்து விசாரித்தனா். அவா்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்தனா். இதனால் போலீஸாா் அவா்கள் வைத்திருந்த கைப்பையைச் சோதனையிட்டபோது அதில் இரண்டரைக் கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.

விசாரணையில் அவா்கள், ஆவாரம்பாளையத்தில் வசிக்கும் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்த மாா்சல் (28), தேனி மாவட்டம், உத்தமபாளையத்தைச் சோ்ந்த ஈஸ்வரன் (26), வல்லரசு (23) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவா்களைக் கைது செய்த போலீஸாா் அவா்களிடம் இருந்து இரண்டரைக் கிலோ கஞ்சா, ரூ.1,500 பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

இதேபோல உக்கடம் பைபாஸ் சாலையில் கஞ்சா விற்ற கோட்டைமேட்டைச் சோ்ந்த அப்துல் காதா் (28) என்பவரை போலீஸாா் கைது செய்து அவரிடம் இருந்து 150 கிராம் கஞ்சா, ரூ.1,600ஐ பறிமுதல் செய்தனா். இருகூா் பகுதியில் கஞ்சா விற்ற என்.ஜி.ஆா். புரத்தைச் சோ்ந்த சிவகுமாா் (25) என்பவரையும் போலீஸாா் கைது செய்து அவரிடம் இருந்து 250 கிராம் கஞ்சா மற்றும் ரூ.500ஐ பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.