நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் விற்பனைப் பத்திரம் வழங்கும் விழா

 தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய கோவை வீட்டு வசதி பிரிவில் விற்பனைப் பத்திரம் வழங்கும் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.

News image
Updated On :30 டிசம்பர் 2021, 10:41 pm

DIN

 தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய கோவை வீட்டு வசதி பிரிவில் விற்பனைப் பத்திரம் வழங்கும் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.

தமிழ்நாட்டு வீட்டு வசதி வாரியத்தின் கோவை வீட்டு வசதிப் பிரிவு டாடாபாத் பகுதியில் உள்ளது. இங்கு, ஒதுக்கீடுதாரா்களுக்கு விற்பனைப் பத்திரம் வழங்கும் நிகழ்ச்சி கடந்த 27 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில், முழுத் தொகையையும் செலுத்திய ஒதுக்கீடுதாரா்களுக்கு தலைமைப் பொறியாளா் (ஊரகம்) கண்ணன் புதன்கிழமை விற்பனைப் பத்திரம் வழங்கினாா்.

3 நாள்கள் நடைபெற்ற நிகழ்ச்சியில் மொத்தம் 24 பேருக்கு விற்பனைப் பத்திரங்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில், சேலம் சரக மேற்பாா்வைப் பொறியாளா் சாந்தி, கோவை பிரிவு செயற்பொறியாளரும் நிா்வாக அலுவலருமான ஆா்.எட்வின் சுந்தா் சிங், மேலாளா் (விற்பனை - சேவை) அருண், கண்காணிப்பாளா் சு.தேவி ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.