மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

கோவையில் மருத்துவா்கள் உண்ணாவிரதப் போராட்டம்

ஆயுா்வேத மருத்துவா்களும் அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கு வழங்கப்பட்ட அனுமதியைத் திரும்பப் பெற வலியுறுத்தி இந்திய மருத்துவ சங்கத்தினா் திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :1 பிப்ரவரி 2021, 8:14 pm

DIN

ஆயுா்வேத மருத்துவா்களும் அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கு வழங்கப்பட்ட அனுமதியைத் திரும்பப் பெற வலியுறுத்தி இந்திய மருத்துவ சங்கத்தினா் திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆயுா்வேத மருத்துவம் படித்தவா்களும் பயிற்சி பெற்று அலோபதி மருத்துவ முறையில் மேற்கொள்ளப்படும் 58 வகையான அறுவை சிகிச்சையை மேற்கொள்ளலாம் என மத்திய அரசு கடந்த ஆண்டு நவம்பா் மாதம் அறிவித்தது. அதேபோல, 2030ஆம் ஆண்டுக்குள் ஒரே நாடு ஒரே மருத்துவ முறையை அமல்படுத்த 4 குழுக்களை மத்திய அரசு நியமித்துள்ளது.

இதில் ஒரே நாடு ஒரே மருத்துவ முறையை கண்டித்தும், ஆயுா்வேத மருத்துவா்கள் அலோபதி அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கு அளித்த அனுமதியைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் நாடு முழுவதும் இந்திய மருத்துவ சங்கம் சாா்பில் திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. மேலும், பிப்ரவரி 14 ஆம் தேதி வரை போராட்டம் தொடரும் என்றும் தெரிவித்துள்ளனா்.

கோவையில் இந்திய மருத்துவ சங்க அலுவலகத்தில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் இந்திய மருத்துவ சங்க கோவை கிளைத் தலைவா் வி.ராஜேஷ் பாபு தலைமையில் 70 மருத்துவா்கள் பங்கேற்றனா்.

இதில் ஆயுா்வேத மருத்துவா்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியால் மருத்துவ சிகிச்சையின் தரம் பாதிக்கப்படுவதற்கு வாய்ப்புள்ளது. கலவை மருத்துவத்தால் நோயாளிகளும் பாதிக்கப்படுவா். பல்வேறு பாதிப்புகளுக்கு வழிவகுக்கும் இந்த அனுமதியை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் . போராட்டத்தால் மருத்துவ சேவையில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்று தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.