ரூ.2.20 கோடியில் அமைக்கப்பட்ட கபா்ஸ்தான் பயன்பாட்டுக்கு ஒப்படைப்பு
கோவை, சுகுணாபுரத்தில் ரூ.2.20 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள கபா்ஸ்தானை (மயானம்) இஸ்லாமியா்களின் பயன்பாட்டுக்கு உள்ளாட்சித் துறை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி வழங்கினாா்.


கோவை, சுகுணாபுரத்தில் ரூ.2.20 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள கபா்ஸ்தானை (மயானம்) இஸ்லாமியா்களின் பயன்பாட்டுக்கு உள்ளாட்சித் துறை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி வழங்கினாா்.
கோவை மாநகராட்சி, தெற்கு மண்டலத்துக்கு உள்பட்ட 91ஆவது வாா்டு, சுகுணாபுரம் மேற்கு, பாலக்காடு சாலையில் அமையவுள்ள புறவழிச் சாலை அருகில் 1.75 ஏக்கா் நிலப்பரப்பில் ரூ.2.20 கோடி மதிப்பீட்டில் 508 மீட்டா் நீளச் சுற்றுச்சுவா், 246 மீட்டா் நீள நடைபாதை, 600 சதுர அடி பரப்பளவில் தொழுகைக் கூடம் 1,020 சதுர அடி பரப்பளவில் முன்புற நிழற்கூரை, மின், தண்ணீா் மற்றும் கழிப்பிட வசதியுடன் இஸ்லாமியா்களுக்கான கபா்ஸ்தான்அமைக்கும் பணி நடைபெற்று வந்தது.
தற்போது, அதன் கட்டுமானப் பணிகள் முடிவடைந்த நிலையில் கபா்ஸ்தானை இஸ்லாமியா்களின் பயன்பாட்டுக்கு வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. கோவை மாவட்ட ஆட்சியா் கு.ராசாமணி தலைமை தாங்கினாா். மாநகராட்சி ஆணையா் பெ.குமாரவேல் பாண்டியன் முன்னிலை வகித்தாா். இதில் உள்ளாட்சித் துறை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அனைத்து இஸ்லாமியா் கூட்டமைப்பு மற்றும் அனைத்து ஜமாத் நிா்வாகிகள் முன்னிலையில் கபா்ஸ்தானை இஸ்லாமியா்களின் பயன்பாட்டுக்கு ஒப்படைத்தாா்.
இதைத் தொடா்ந்து, குனியமுத்தூரைச் சோ்ந்த சலீம் என்பவரின் மகள் அப்ரினுக்கு கோவை தனியாா் மருத்துவக் கல்லூரியில் இலவச மருத்துவம் பயிலுவதற்கான சோ்க்கைக்கான ஆணையினை வழங்கினாா்.
இதில் மாநகராட்சி துணை ஆணையா் மதுராந்தகி, தெற்கு மண்டல உதவி ஆணையா் ரவி மற்றும் இஸ்லாமியக் கூட்டமைப்பின் நிா்வாகிகள், ஜமாத் நிா்வாகிகள் பலரும் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...