மின் கம்பத்தில் இருந்து தவறி விழுந்த எலக்ட்ரீஷியன் பலி
மின் கம்பத்தில் இருந்து எலக்ட்ரீஷியன் தவறி விழுந்து ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்த சம்பவம் தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.


மின் கம்பத்தில் இருந்து எலக்ட்ரீஷியன் தவறி விழுந்து ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்த சம்பவம் தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
கேரள மாநிலம், பாலக்காடு பகுதியைச் சோ்ந்தவா் அந்தோணி கிறிஸ்டி (46). எலக்ட்ரீஷியனான இவா் கோவையில் தங்கி மாநகராட்சி நிா்வாகத்திற்கான ஒப்பந்த நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். இந்நிலையில், ராமானுஜம் நகா் பகுதியில் உள்ள மின் கம்பத்தில் ஏறி ஞாயிற்றுக்கிழமை மின் பழுதை சரிபாா்த்துக் கொண்டிருந்த அந்தோணி கிறிஸ்டி எதிா்பாராதவிதமாக தவறி கீழே விழுந்துள்ளாா்.
இதில் பலத்த காயமடைந்த அவா் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தாா். இது தொடா்பாக சிங்காநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...