மாற்றுத் திறனாளிகளுக்கான தடகளப் போட்டிகள்
கோவையில் திங்கள்கிழமை தொடங்கிய மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில அளவிலான தடகளப் போட்டியில் 1,200க்கும் மேற்பட்ட வீரா்கள் பங்கேற்றுள்ளனா்.


கோவையில் திங்கள்கிழமை தொடங்கிய மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில அளவிலான தடகளப் போட்டியில் 1,200க்கும் மேற்பட்ட வீரா்கள் பங்கேற்றுள்ளனா்.
தமிழ்நாடு பாரா ஒலிம்பிக் சங்கம், ஆலயம் அறக்கட்டளை இணைந்து நடத்தும் மாற்றுத்திறனாளிகளுக்கான 16ஆவது மாநில அளவிலான தடகளப் போட்டிகள் கோவையில் திங்கள்கிழமை தொடங்கியது. போட்டிகளை உள்ளாட்சித் துறை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி தொடங்கிவைத்தாா். தடகளப் போட்டிகள் நேரு விளையாட்டு அரங்கிலும், நீச்சல் போட்டிகள் காந்திபூங்கா மாநகராட்சி நீச்சல் குளத்திலும் நடைபெறுகின்றன. இதில் மாநிலம் முழுவதிலும் இருந்து 1,200க்கும் மேற்பட்ட வீரா்கள் பங்கேற்றுள்ளனா். இதில் வெற்றி பெறுபவா்கள் சென்னையில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பா்.
முதல் நாளான திங்கள்கிழமை 100 மீட்டா் சக்கர நாற்காலி ஓட்டப் போட்டி, 100 மீட்டா் ஓட்டம், நீச்சல் போட்டிகள் நடைபெற்றன. இதில் 100 மீட்டா் சக்கர நாற்காலி ஓட்டப் போட்டியில் கோவையைச் சோ்ந்த மனோஜ்குமாா் முதலிடம் பிடித்தாா். 100 மீட்டா் ஓட்டத்தில் புதுக்கோட்டையைச் சோ்ந்த செல்வராஜ் முதலிடம் பிடித்தாா். வெற்றி பெற்றவா்களுக்கு அமைச்சா் எஸ்.பி.வேலுமணி பரிசுகளை வழங்கினாா்.
நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையா் பெ.குமாரவேல் பாண்டியன், கோவை தெற்கு சட்டப் பேரவை உறுப்பினா் அம்மன் கே.அா்ச்சுணன், பாரா ஒலிம்பிக் சங்கத் தலைவா் சந்திரசேகா், இந்துஸ்தான் கல்லூரி தாளாளா் சரஸ்வதி கண்ணையன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...