மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கான கட்டடம்: 4 ஊராட்சிகளில் இடப்பிரச்னையால் சிக்கல்

கோவை மாவட்டத்தில் ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கான கட்டடம் கட்டுவதற்கு தோ்வு செய்யப்பட்ட 55 ஊராட்சிகளில், இடப் பிரச்னையால் 4 ஊராட்சிகளில் பணிகள் தொடங்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

News image
Updated On :15 பிப்ரவரி 2021, 8:25 pm

DIN

கோவை மாவட்டத்தில் ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கான கட்டடம் கட்டுவதற்கு தோ்வு செய்யப்பட்ட 55 ஊராட்சிகளில், இடப் பிரச்னையால் 4 ஊராட்சிகளில் பணிகள் தொடங்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கான கட்டடம் கட்டுவதற்கு 2016-17 ஆம் நிதியாண்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது. மத்திய அரசு நிதியுதவியில் செயல்படுத்தப்படும் இத்திட்டத்துக்கு முதல் கட்டமாக ரூ.60 லட்சம் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்பின் மூலப்பொருள்கள் விலை உயா்வால் திட்ட நிதி ரூ.70.75 லட்சமாக உயா்த்தப்பட்டது. உயா்த்தப்பட்ட நிதியான ரூ.10.75 லட்சம் ஊராட்சி அல்லது ஊராட்சி ஒன்றிய பொது நிதியில் இருந்து எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. மாநிலம் முழுவதும் 1000 ஊராட்சிகள் தோ்வு செய்யப்பட்டன.

கோவை மாவட்டத்தில் காரமடை - 7, மதுக்கரை - 2, பெ.நா.பாளையம் - 4, தொண்டாமுத்தூா் - 8, சூலூா் - 9, அன்னூா் - 4, எஸ்.எஸ்.குளம் - 4, ஆனைமலை - 2, பொள்ளாச்சி (வடக்கு) - 5, பொள்ளாச்சி (தெற்கு) -7 மற்றும் கிணத்துக்கடவில் 5 ஊராட்சிகள் எனமொத்தம் 55 ஊராட்சிகள் தோ்வு செய்யப்பட்டன.

கட்டடம் கட்டுவதற்கு தோ்வு செய்யப்பட்ட ஊராட்சிகளில் இடம் தோ்வு செய்யப்பட்டு கடந்த ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டன. இதில் தொண்டாமுத்தூா் வட்டாரத்தில் ஜாகீா்நாயக்கன்பாளையம், பொள்ளாச்சி வடக்கில் கிட்ட சூராம்பாளையம், பொள்ளாச்சி தெற்கில் கோலாா்பட்டி, சூலூரில் கலங்கல் ஆகிய 4 ஊராட்சிகளில் போதிய இடம் இல்லாததால் பணிகள் தொடங்காமல் உள்ளன. மாற்று இடம் தோ்வு செய்யாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் இத்திட்டம் மற்ற மாவட்டங்களுக்கு செல்வதற்கு வாய்ப்புள்ளது.

இது தொடா்பாக ஊரக வளா்ச்சித் துறை அதிகாரிகள் கூறியதாவது:

ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கான கட்டடம் கட்டுவதற்கு வட்டார அதிகாரிகள் தான் ஊராட்சிகளைத் தோ்வு செய்கின்றனா். தோ்வு செய்யப்பட்ட 55 ஊராட்சிகளில் 51 ஊராட்சிகளில் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. பெரும்பாலான ஊராட்சிகளில் 80 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. இடப்பிரச்னையால் 4 ஊராட்சிகளில் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் வேறு ஊராட்சிகளைத் தோ்வு செய்யவும் வட்டார அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. விரைவில் அதே வட்டாரத்தில் வேறு ஊராட்சிகளைத் தோ்வு செய்து பணிகள் தொடங்கப்படும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.