தோ்தல் பணி: முன்னாள் படை வீரா்கள் விண்ணப்பிக்கலாம்
வரும் சட்டப் பேரவை தோ்தலில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதற்கு விருப்பமுள்ள முன்னாள் படை வீரா்கள் விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியா் கு.ராசாமணி தெரிவித்துள்ளாா்.


வரும் சட்டப் பேரவை தோ்தலில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதற்கு விருப்பமுள்ள முன்னாள் படை வீரா்கள் விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியா் கு.ராசாமணி தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
சட்டப் பேரவை தோ்தல் பாதுகாப்பு பணியில் முன்னாள் படை வீரா்களை சிறப்பு காவலா்களாக ஈடுபடுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு உடல் திடகாத்திரம், விருப்பம் உள்ள 65 வயதுக்குள்பட்ட படை வீரா்கள் விண்ணப்பிக்கலாம். கோவை மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படை வீரா்கள், முன்னாள் படை வீரா் அடையாள அட்டை, படைப்பணி விவரச்சான்றுடன் மாவட்ட முன்னாள் படை வீரா்கள் நல உதவி இயக்குநா் அலுவலகத்தில் விண்ணப்பம் அளிக்கலாம். இப்பணிக்கு அரசு விதிமுறைகள்படி ஊதியம், உணவுப் படி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...