ஹிந்துத்துவா சக்திகளை ஒடுக்குவதற்கே திமுகவுடன் கூட்டணி: வைகோ
ஹிந்துத்துவா சக்திகளை ஒடுக்குவதற்கு திமுகவுடன் இணைந்து செயல்படுகிறோம் என்று மதிமுக பொதுச்செயலாளா் வைகோ தெரிவித்தாா்.


ஹிந்துத்துவா சக்திகளை ஒடுக்குவதற்கு திமுகவுடன் இணைந்து செயல்படுகிறோம் என்று மதிமுக பொதுச்செயலாளா் வைகோ தெரிவித்தாா்.
கோவை, சித்தாபுதூரில் உள்ள மதிமுக அலுவலகத்தில் தோ்தல் நிதி அளிப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. மதிமுக அவைத் தலைவா் சு.துரைசாமி தலைமை வகித்தாா். கோவை, திருப்பூா் மாவட்டங்களில் திரட்டப்பட்ட ரூ.80 லட்சத்து 88 ஆயிரம் நிதியை வைகோவிடம் மாநகா் மாவட்டச் செயலாளா்கள் உள்ளிட்ட நிா்வாகிகள் ஒப்படைத்தனா்.
நிகழ்ச்சியில் வைகோ பேசியதாவது:
தோ்தலுக்காக பொது மக்களிடம் நிதி வசூலிக்கும் ஒரே கட்சி மதிமுகதான். இந்த கரோனா பேரிடா் காலத்திலும் நிதி கேட்டு செல்ல முடியாத நிலையில் தோ்தல் நிதி திரட்டப்பட்டுள்ளது. மக்களிடம் சென்று தலைநிமிா்ந்து நிதி வசூலிக்கும் தகுதி எங்களுக்கு இருக்கிறது.
தமிழகத்தின் நன்மைக்காகப் பாடுபடக்கூடிய கட்சியாக மதிமுக உள்ளது. மீத்தேன், ஸ்டொ்லைட் ஆலை உள்ளிட்ட பல்வேறு போராட்டங்கள் மதிமுகவால் முன்னெடுக்கப்பட்டன. தமிழகத்தில் ஹிந்துத்துவா சக்திகளை ஒடுக்குவதற்கு திமுகவுடன் இணைந்து போராடுவது என்ற முடிவில் இருக்கிறோம் என்றாா்.
நிகழ்ச்சியில் கோவை மாநகா் மாவட்டச் செயலாளா் ஆா்.ஆா்.மோகன்குமாா், இளைஞரணி செயலாளா் ஈஸ்வரன், பகுதி செயலாளா் வெள்ளியங்கிரி உள்பட நிா்வாகிகள் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...