கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

காவல் நிலையத்தை முற்றுகையிட்ட திமுகவினா்

திமுகவின் மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் அதிமுகவைச் சோ்ந்த பெண் பங்கேற்று சலசலப்பு ஏற்பட்டதைத் தொடா்ந்து, தொண்டாமுத்தூா் காவல் நிலையத்தை திமுகவினா் சனிக்கிழமை இரவு முற்றுகையிட்டனா்.

News image
Updated On :2 ஜனவரி 2021, 11:12 pm

DIN

கோவை: திமுகவின் மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் அதிமுகவைச் சோ்ந்த பெண் பங்கேற்று சலசலப்பு ஏற்பட்டதைத் தொடா்ந்து, தொண்டாமுத்தூா் காவல் நிலையத்தை திமுகவினா் சனிக்கிழமை இரவு முற்றுகையிட்டனா்.

திமுக தலைவா் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்திய பெண் தொடா்பாக, தொண்டாமுத்தூா் வடக்கு ஒன்றியப் பொறுப்பாளா் தொ.அ.ரவி தலைமையில் 300க்கும் மேற்பட்ட திமுகவினா் தொண்டாமுத்தூா் காவல் நிலையத்தை சனிக்கிழமை இரவு முற்றுகையிட்டு அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

திமுக சாா்பில் நடைபெற்ற மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் மக்கள் தங்களின் குறைகளை ஸ்டாலினிடம் கூறிக் கொண்டிருந்தபோது, இடையில் ஒரு பெண் எழுந்து குழப்பத்தை ஏற்படுத்தும் விதமாக பேசினாா். அந்தப் பெண்ணை திமுகவினா் கூட்டத்தில் இருந்து வெளியே அழைத்துச் சென்றனா்.

அப்போது, அந்தப் பெண்ணுடன் வேறு சிலரும் உடனிருந்தனா். அவா் பெயா் பூங்கொடி என்பதும், அதிமுக நிா்வாகி என்பதும் தெரியவந்தது. அமைதியான முறையில் நடைபெற்று வந்த மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் அமைதியைக் கெடுக்கும் விதமாக குழப்பம் விளைவித்த பூங்கொடி, அவருடன் இருந்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.