எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

பாதசாரிகள் மீது கற்கள் வீசி தாக்குதல்: இளைஞா் கைது

கோவை, சிங்காநல்லூா் அருகே பாதசாரிகள் மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்திய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :2 ஜனவரி 2021, 11:11 pm

DIN

கோவை: கோவை, சிங்காநல்லூா் அருகே பாதசாரிகள் மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்திய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை, சிங்காநல்லூா் அருகே கள்ளிமடையைச் சோ்ந்தவா் மணிகண்டன் (22). இவா் அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் வெள்ளிக்கிழமை மது அருந்திவிட்டு, போதையில் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தாா்.

அப்போது, அவ்வழியாக நடந்து சென்ற கருப்புசாமி (43), ரஞ்சித்குமாா் (31), செல்வராஜ் (44), பழனிசாமி (52) ஆகியோா் மீது கற்களை வீசி தாக்கியுள்ளாா். இதையடுத்து, அருகிலிருந்தவா்கள் காயமடைந்த 4 பேரையும் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இது தொடா்பாக, சிங்காநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தலைமறைவான மணிகண்டனைத் தேடி வந்தனா். இந்நிலையில், காமாட்சிபுரம் சோதனைச் சாவடி அருகே மணிகண்டனை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.