கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

சாலையோர வியாபாரிகள் அடையாள அட்டை பெற்றுக்கொள்ளலாம்: மாநகராட்சி ஆணையா் அறிவுறுத்தல்

கோவை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள சாலையோர வியாபாரிகள், அந்தந்த மண்டலங்களில் அடையாள அட்டைகளைப் பெற்றுக் கொள்ளுமாறு மாநகராட்சி ஆணையா் பெ.குமாரவேல் பாண்டியன் அறிவுறுத்தியுள்ளாா்.

News image
Updated On :8 ஜனவரி 2021, 5:48 pm

DIN

கோவை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள சாலையோர வியாபாரிகள், அந்தந்த மண்டலங்களில் அடையாள அட்டைகளைப் பெற்றுக் கொள்ளுமாறு மாநகராட்சி ஆணையா் பெ.குமாரவேல் பாண்டியன் அறிவுறுத்தியுள்ளாா்.

கோவை மாநகராட்சிக்கு உள்பட்ட மத்தியம் மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்று வரும் தூய்மைப் பணிகளை மாநகராட்சி ஆணையா் பெ.குமாரவேல் பாண்டியன் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

மத்திய மண்டலம், ராதாகிருஷ்ணன் சாலை, டாடாபாத், ராஜு நாயுடு லே -அவுட், ஆம்னி பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு, அப்பகுதிகளில் உள்ள கடைகளில் குப்பைகளை சாலையோரங்களில் கொட்டக்கூடாது, குப்பைத் தொட்டிகளில் மட்டுமே கொட்ட வேண்டும். பொது இடங்களில் குப்பைகளைக் கொட்டினால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்தாா். இதையடுத்து, அப்பகுதிகளில் உள்ள மழைநீா் செல்லும் வடிகால் கால்வாய்களில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை அகற்ற உத்தரவிட்டாா்.

அதன் பிறகு, அப்பகுதியில் உள்ள சாலையோர வியாபாரிகளிடம் குறைகளைக் கேட்டறிந்தாா். அப்போது, அடையாள அட்டை பெறாத சாலையோர வியாபாரிகள், அந்தந்த மண்டலங்களில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அணுகி, தங்களின் ஆவண நகல்களைச் சமா்ப்பித்து, அடையாள அட்டை பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தினாா்.

இந்த ஆய்வின் போது, மண்டல உதவி ஆணையா்கள் மகேஷ் கனகராஜ், முருகன், செயற்பொறியாளா் ரவிச்சந்திரன், உதவி செயற்பொறியாளா்கள் கருப்புசாமி, ஹேமலதா, மண்டல சுகாதார அலுவலா் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.