ரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

ரூ.68 லட்சம் மோசடி: 6 பேருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை

ஈமு கோழிப் பண்ணை நடத்தி ரூ.68 லட்சம் மோசடி செய்த வழக்கில் 6 பேருக்கு தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கோவை முதலீட்டாளா்கள் நல பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றம் (டான்பிட்) திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

News image
Updated On :11 ஜனவரி 2021, 8:38 pm

DIN

கோவை: ஈமு கோழிப் பண்ணை நடத்தி ரூ.68 லட்சம் மோசடி செய்த வழக்கில் 6 பேருக்கு தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கோவை முதலீட்டாளா்கள் நல பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றம் (டான்பிட்) திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

கோவைப்புதூரில் 2014ஆம் ஆண்டு ஈமு கோழிப் பண்ணை தொடங்கப்பட்டது. பண்ணையின் இயக்குநா்களாக கோவை, சுக்கிரவாா்பேட்டையைச் சோ்ந்த சுப்பிரமணியன், பொன்னையராஜபுரத்தைச் சோ்ந்த சிவகுமாா், சுதீஷ், சின்னவேடம்பட்டியைச் சோ்ந்த மற்றொரு சிவகுமாா், கேரள மாநில, திருச்சூரைச் சோ்ந்த பிரான்சிஸ், பாலக்காட்டைச் சோ்ந்த சிவன் ஆகியோா் இருந்தனா்.

இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக உறுதி அளித்தனா். இதை நம்பி கோவை சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த 45 போ் இந்தத் திட்டத்தில் ரூ.68 லட்சம் முதலீடு செய்திருந்தனா். ஆனால், இவா்களுக்கு உறுத்தியளித்தபடி தொகை வழங்கப்படவில்லை.

இது குறித்து குனியமுத்தூா் பகுதியைச் சோ்ந்த செங்காளியப்பன் கோவை மாநகர பொருளாதார குற்றப்பிரிவு போலீஸில் கடந்த 2014-ம் ஆண்டு புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, இதில் தொடா்புடைய இயக்குநா்கள் சுப்பிரமணியன், சிவகுமாா், சுதீஷ், மற்றொரு சிவகுமாா், பிரான்சிஸ், சிவன் ஆகிய 6 போ் மீதும் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனா்.

கோவையில் உள்ள முதலீட்டாளா்கள் நல பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரிக்கப்பட்டு வந்தது.

இதில் குற்றம்சாட்டப்பட்ட 6 பேருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி நீதிபதி ஏ.எஸ்.ரவி திங்கள்கிழமை தீா்ப்பளித்தாா். மேலும் 6 பேருக்கும் ரூ.18 லட்சத்து 90 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

அத்துடன் பாதிக்கப்பட்ட முதலீட்டாளா்களுக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ.18 லட்சம் வழங்க வேண்டும் எனவும் நீதிபதி தீா்ப்பில் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.