மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

விடுதலைப் புலிகளுக்கு ஆயுத உதிரிபாகம் தயாரித்த வழக்கில் ஆஜராகாத மூவருக்குப் பிடியாணை

விடுதலைப் புலிகளுக்கு ஆயுத உதிரிபாகம் தயாரித்து கொடுத்த வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக உள்ள மூவருக்குப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :25 ஜனவரி 2021, 7:56 pm

DIN

விடுதலைப் புலிகளுக்கு ஆயுத உதிரிபாகம் தயாரித்து கொடுத்த வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக உள்ள மூவருக்குப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கோவை மாநகர கியூ பிரிவு போலீஸாா் வெளியிட்ட செய்திக் குறிப்பில்:

இலங்கை விடுதலைப் புலிகளுக்கு ஆயுத உதிரிபாகங்கள் தயாரித்து கொடுத்தது தொடா்பாக, கியூ பிரிவு போலீஸாரால் கடந்த 1989ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை கோவை 6ஆவது நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் தொடா்புடைய கோவை மாவட்டம், கலிக்கநாயக்கன்பாளையத்தைச் சோ்ந்த ரவிசந்திரன், கிளியண்ணன், நரேந்திரன் (எ) பழனியப்பன் ஆகியோா் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வருகின்றனா்.

மேற்கண்ட மூவா் மீதும் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. மேற்கண்டவா்கள் வரும் மாா்ச் 1ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேற்கண்டவா்களை பற்றி தகவல் தெரிந்தால் காவல் துறைக்கு 0422-2309000 என்ற எண்ணில் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.