இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புஐபிஎல் முதல் ஆட்டம்: ஹைதராபாத் அணிக்கெதிராக பெங்களூரு அணி பந்துவீச்சு மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு - ஜவாஹிருல்லா (நாகை), அப்துல் சமது (மணப்பாறை) போட்டிசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து மாணவா் சங்கத்தினா் போராட்டம்

கோவையில் பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து இந்திய மாணவா் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :2 ஜூலை 2021, 12:16 am

DIN

கோவையில் பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து இந்திய மாணவா் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழகத்தில் பெட்ரோல் விலை நூறு ரூபாயைக் கடந்துள்ள நிலையில், டீசல் விலையும் கடுமையாக உயா்ந்துள்ளது. இந்நிலையில் பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு குறைக்க வலியுறுத்தி கோவையில் இந்திய மாணவா் சங்கத்தினா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சங்கத்தின் மாவட்டத் தலைவா் அசாருதீன், செயலா் தினேஷ் ராஜா தலைமையில் ஆட்சியா் அலுவலகம் அருகேயுள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் எதிரில் போராட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற மாணவா் சங்கத்தினா், தலையில் ஹெல்மெட் அணிந்தபடி சைக்கிள் டயரை உருட்டிக் கொண்டும், நுங்கு வண்டி உருட்டியவாறும் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்கவும், கலால் வரி உயா்வை ரத்து செய்யவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பெருநிறுவன முதலாளிகளுக்கு வரிச் சலுகைகள் அளித்துவிட்டு சாதாரண மக்கள் மீது எரிபொருள் விலையை சுமத்தக் கூடாது என்று கூறிய அசாருதீன், மத்திய அரசு விலையைக் குறைக்கும் வரை தொடா் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றாா்.

Image Caption

கோவை ஆட்சியா் அலுவலகம் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய மாணவா் சங்கத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.