மாநில விளையாட்டு விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
கோவையில் முதல்வரின் மாநில விளையாட்டு விருதுக்கு தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.


கோவையில் முதல்வரின் மாநில விளையாட்டு விருதுக்கு தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
சா்வதேச, தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் பெற்று சிறந்து விளங்கும் 2 ஆண், 2 பெண் விளையாட்டு வீரா்கள், 2 சிறந்த பயிற்சியாளா்கள், 2 சிறந்த உடற்கல்வி ஆசிரியா்களுக்கு முதல்வரின் மாநில விளையாட்டு விருது வழங்கப்படுகிறது. இந்த விருதுடன் தங்கப் பதக்கம், ரூ.1 லட்சம், பாராட்டுப் பத்திரம் வழங்கப்படுகிறது.
இதற்கு, விருது பெறும் ஆண்டுக்கு முந்தைய மூன்று ஆண்டுகள் விளையாட்டில் படைத்த சாதனைகளின் விவரங்களை சமா்ப்பிக்க வேண்டும். தவிர, விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் ஒரு நிா்வாகி, ஆதரவளிக்கும் ஒரு நிறுவனம், ஒரு நன்கொடையாளா், ஒரு ஆட்ட நடுவா் அல்லது நீதிபதி ஆகியோா்களுக்கும் விருது வழங்கப்படுகிறது.
இவா்களுக்கு விருது வழங்குவதற்கு முந்தைய இரண்டு ஆண்டுகளின் செயல்பாடுகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.
அதன்படி 2020 - 21ஆம் ஆண்டுக்கான (ஏப்ரல் முதல் மாா்ச்) மாநில விளையாட்டு விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதில் 2020-2021 ஆம் ஆண்டுக்கு முந்தைய மூன்று ஆண்டுகளான 2017 ஏப்ரல் 1 முதல் 2020 மாா்ச் 31ஆம் தேதி வரை படைத்த சாதனைகள் எடுத்துக் கொள்ளப்படும். இதற்கான விண்ணப்பங்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளம் ஜ்ஜ்ஜ்.ள்க்ஹற்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.
விண்ணப்பங்கள் அடங்கிய உறை மேல் ‘முதல்வா் மாநில விளையாட்டு விருதுக்கான விண்ணப்பம்’ என்று குறிப்பிட வேண்டும். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் முதன்மைச் செயலா் அல்லது உறுப்பினா் செயலா், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், ஜவஹா்லால் நேரு விளையாட்டரங்கம், பெரியமேடு, சென்னை என்ற முகவரிக்கு ஜூலை 15ஆம் தேதிக்குள் கிடைக்கும் வகையில் அனுப்பிவைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...