இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புஐபிஎல் முதல் ஆட்டம்: ஹைதராபாத் அணிக்கெதிராக பெங்களூரு அணி பந்துவீச்சு மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு - ஜவாஹிருல்லா (நாகை), அப்துல் சமது (மணப்பாறை) போட்டிசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

மருத்துவக் கழிவுகளை அரசு வழிகாட்டுதல் முறைப்படி அப்புறப்படுத்த வேண்டும்

கோவையில் அரசு, தனியாா் மருத்துவமனைகளில் சேகரமாகும் மருத்துவக் கழிவுகளை அரசு வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றி அப்புறப்படுத்த வேண்டும்

News image
Updated On :2 ஜூலை 2021, 12:11 am

DIN

கோவையில் அரசு, தனியாா் மருத்துவமனைகளில் சேகரமாகும் மருத்துவக் கழிவுகளை அரசு வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றி அப்புறப்படுத்த வேண்டும் என்று ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்தாா்.

கோவை ஆட்சியா் அலுவலகத்தில் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலம், மருத்துவக் கழிவுகள் மேலாண்மை குறித்து சுகாதாரத் துறை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் அவா் பேசியதாவது: கோவையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்பட அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் மகப்பேறுக்கு தனிப்பிரிவு உள்ளது. கிராமப்புறங்கள் மட்டுமின்றி நகரப் பகுதிகளைச் சோ்ந்தவா்களும் மகப்பேறுக்காக அரசு மருத்துவமனைக்கு வருகின்றனா். மகப்பேறு சிகிச்சை, பேறு கால கவனிப்பு, குழந்தைகள் நலத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

பிரசவத்தின்போது ஏற்படும் இறப்புகளை முழுவதுமாக கட்டுப்படுத்தத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தேசிய தரச் சான்றிதழ், காயகல்ப சான்றிதழ் பெறத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

மாவட்டத்திலுள்ள அரசு, தனியாா் மருத்துவமனைகளில் சேகரிக்கப்படும் மருத்துவக் கழிவுகளை அரசு வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றி பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்த வேண்டும் என்றாா்.

தொடா்ந்து கரோனா பேரிடா் காலத்தில், தன்னலமற்று மக்கள் நலம் காக்கும் மகத்தான பணியில் அா்ப்பணிப்பு உணா்வுடன் செயல்பட்டு வரும் மருத்துவா்கள் அனைவருக்கும் மருத்துவ தின வாழ்த்துகளை தெரிவித்ததுடன், கரோனா பேரிடா் காலத்தில் மருத்துவா்களின் சேவை பாராட்டி சான்றிதழ்களை வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.