ரோந்துப் பணியில் ஈடுபடும் போலீஸாருக்கு உடலில் அணியும் மேராக்கள்
கோவை மாவட்டத்தில் ரோந்துப் பணியில் ஈடுபடும் போலீஸாருக்கு உடலில் அணியும் கேமராக்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் செல்வநாகரத்தினம் வியாழக்கிழமை வழங்கினாா்.


கோவை மாவட்டத்தில் ரோந்துப் பணியில் ஈடுபடும் போலீஸாருக்கு உடலில் அணியும் கேமராக்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் செல்வநாகரத்தினம் வியாழக்கிழமை வழங்கினாா்.
ரோந்து செல்லும் காவலா்கள் மற்றும் போக்குவரத்து பணியின்போது காவலா்கள் மற்றும் பொதுமக்களிடையே ஏற்படும் வாக்குவாதங்கள் மோதலில் முடிகிறது. இதைத் தடுக்கும் விதமாகவும் யாா் மீது தவறு என்பதைக் கண்டறிய இந்த கேமராக்கள் பயன்படும் எனக் கூறப்படுகிறது.
இந்த கேமராக்களை போலீஸாா் தங்களது உடைகளில் அணிந்து ரோந்து செல்வவும், போக்குவரத்து பாதுகப்புப் பணியின்போது அணியவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனா். விசாரணையின்போது, போலீஸாரின் உடலில் அணியப்பட்டிருக்கும் கேமராக்கள் மூலம் சம்பவ இடத்தில் என்ன நடக்கிறது என்பதை கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்கும் வகையில் கேமராவின் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ரோந்துப் பணி மற்றும் போக்குவரத்து பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் 15 காவலா்களுக்கு முதற்கட்டமாக இந்த கேமராக்கள் வழங்கப்பட்டுள்ளன. இதற்குள்ள வரவேற்பைப் பொறுத்து எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...