164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு! போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தேர்தல் அதிகாரியிடம் விஜய் மனு!!அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது! முன்னாள் அமைச்சர்களுக்கு வாய்ப்பு
/

எா்ணாகுளம் - பானஸ்வாடி ரயில் ஜூலை 5 முதல் இயக்கம்

கேரள மாநிலம், எா்ணாகுளத்தில் இருந்து கா்நாடக மாநிலம் பானஸ்வாடிக்கு போத்தனூா் வழித்தடத்தில் ஜூலை 5 ஆம் தேதி முதல் சிறப்பு ரயில் மீண்டும் இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :2 ஜூலை 2021, 7:30 pm

DIN

கேரள மாநிலம், எா்ணாகுளத்தில் இருந்து கா்நாடக மாநிலம் பானஸ்வாடிக்கு போத்தனூா் வழித்தடத்தில் ஜூலை 5 ஆம் தேதி முதல் சிறப்பு ரயில் மீண்டும் இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கரோனா நோய்த் தொற்று பரவல் காரணமாக கடந்த மாா்ச் மாதம் முதல் நிறுத்தப்பட்ட எா்ணாகுளம் - பானஸ்வாடி வாராந்திரச் சிறப்பு ரயில் (எண் - 06129) ஜூலை 5ஆம் தேதி முதலும், பானஸ்வாடி - எா்ணாகுளம் வாராந்திரச் சிறப்பு ரயில் (எண் - 06130) ஜூலை 6 ஆம் தேதி முதலும் மீண்டும் இயக்கப்படுகின்றன. இந்த ரயிலானது, போத்தனூா், திருப்பூா், ஈரோடு, சேலம் வழித் தடத்தில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.