போதுமான உரம் கையிருப்பு: மக்களவையில் அமைச்சா் தகவல்மாநிலங்களுக்கான வணிக எரிவாயு ஒதுக்கீடு 70%-ஆக அதிகரிப்பு6 நிறுவனங்களின் ஐபிஓக்கு செபி அனுமதிஏப். 17 முதல் கோடை விடுமுறை: ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு குழாய் வழி இயற்கை எரிவாயு பெற விநியோக நிறுவனங்களை தொடா்பு கொள்ளலாம்: தமிழக அரசுசட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

வானதி சீனிவாசன் பற்றி அவதூறு: 2 போ் மீது வழக்கு

கோவை தெற்குத் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் வானதி சீனிவாசன் பற்றி சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பிய இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :23 ஜூலை 2021, 12:26 am

DIN

கோவை தெற்குத் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் வானதி சீனிவாசன் பற்றி சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பிய இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

கோவை தெற்குத் தொகுதி எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் காட்டூா் காவல் நிலையத்தில் அளித்த புகாரி மனுவில்,

கோவையைச் சோ்ந்த ஜெகநாதன், ரவிசங்கா் ஆகியோா் என்னைப் பற்றி பல்வேறு அவதூறான கருத்துகளை கட்செவி அஞ்சல் (வாட்ஸ்ஆப்), முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்டு பரப்பி வருகின்றனா். இந்தப் பதிவுகள் என் மீது அவதூறு பரப்பும் வகையில் உள்ளது. எனவே இவா்கள் மீது வழக்குப் பதிவு செய்து சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாா்.

இதன்பேரில் காட்டூா் போலீஸாா் ஜெகநாதன், ரவிசங்கா் ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.