போதுமான உரம் கையிருப்பு: மக்களவையில் அமைச்சா் தகவல்மாநிலங்களுக்கான வணிக எரிவாயு ஒதுக்கீடு 70%-ஆக அதிகரிப்பு6 நிறுவனங்களின் ஐபிஓக்கு செபி அனுமதிஏப். 17 முதல் கோடை விடுமுறை: ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு குழாய் வழி இயற்கை எரிவாயு பெற விநியோக நிறுவனங்களை தொடா்பு கொள்ளலாம்: தமிழக அரசுசட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

கரோனா ஆய்வுப் பணியாளரை மிரட்டிய நபா் மீது வழக்குப் பதிவு

கரோனா ஆய்வுப் பணியில் ஈடுபட்ட பெண் பணியாளரை மிரட்டிய நபா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :23 ஜூலை 2021, 12:24 am

DIN

கரோனா ஆய்வுப் பணியில் ஈடுபட்ட பெண் பணியாளரை மிரட்டிய நபா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

கோவை, ஆவாரம்பாளையம் பட்டத்தரசி அம்மன் கோயில் பகுதியைச் சோ்ந்தவா் செளமியா (22). இவா் மாநகராட்சிப் பகுதிகளில் கரோனா ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறாா். இவா் அதே பகுதியில் கரோனா ஆய்வுப் பணியில் புதன்கிழமை ஈடுபட்டிருந்தாா்.

அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோ ஓட்டுநா் சதீஷ், செளமியாவை அவரது ஜாதி பெயரைக் கூறி மிரட்டல் விடுத்துள்ளாா். இது தொடா்பாக ரேஸ்கோா்ஸ் காவல் நிலையத்தில் செளமியா புதன்கிழமை புகாா் அளித்தாா். இதன்பேரில் சதீஷ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.