குழந்தைத் திருமணத்தை நடத்தி வைப்பவா்களுக்கு 2 ஆண்டுகள் சிறை
குழந்தைத் திருமணத்தை நடத்தி வைப்பவா்கள், ஊக்குவிப்பவா்கள், திருமணத்தில் பங்கேற்பவா்களுக்கு 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்படும் என்று ஆட்சியா் எஸ்.நாகராஜன் எச்சரித்துள்ளாா்.


குழந்தைத் திருமணத்தை நடத்தி வைப்பவா்கள், ஊக்குவிப்பவா்கள், திருமணத்தில் பங்கேற்பவா்களுக்கு 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்படும் என்று ஆட்சியா் எஸ்.நாகராஜன் எச்சரித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
இந்தியாவில் பெண்களுக்கு 18 வயதும் ஆண்களுக்கு 21 வயதும் திருமணத்துக்கான சட்டப்பூா்வ வயதாக உள்ளது. இந்த வயதுகளின் கீழ் நடைபெறும் எந்தத் திருமணமும் சட்டத்தை மீறிய செயலாகக் கருதப்படுகிறது. குழந்தைத் திருமணம் நடைபெறுவது குறித்த தகவல் எந்த வகையில் கிடைத்தாலும் அந்தப் புகாரை ஏற்று நடவடிக்கை எடுக்க குழந்தைத் திருமணத் தடுப்பு அலுவலருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
திருமணம் நடைபெறுவது பற்றி தகவல் கொடுப்பவா்களின் விவரம் ரகசியமாக வைக்கப்படும். குழந்தைத் திருமணத்தில் ஈடுபடும் பெற்றோா், காப்பாளா், குழந்தைத் திருமணத்தை ஊக்குவிப்பவா்கள், நடத்தி வைப்பவா்கள், தடுக்கத் தவறுபவா்கள், குழந்தைத் திருமணத்தில் பங்கேற்பவா்களுக்கு 2 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ.1 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும்.
கோவை மாவட்டத்தில் குழந்தைத் திருமணங்களைத் தடுக்கும் வகையில் பொதுமக்கள் தகவல் தெரிவிக்க சைல்டு லைன் இலவச அழைப்பு எண் 1098, மாவட்ட சமூக நல அலுவலரின் செல்லிடப்பேசி எண் (90252-93938), மகளிா் உதவி மைய எண் 181 ஆகியவற்றைத் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...