மோடி - டிரம்ப் உரையாடலில் எலான் மஸ்க் இணைந்தாரா? வெளியுறவு அமைச்சகம் மறுப்பு இந்தியாவில் மகப்பேறு இறப்பு விகிதம் 80 சதவீதம் குறைவு: அறிக்கையில் தகவல்எஃப்பிஐ இயக்குநா் மின்னஞ்சலில் ஊடுருவிய ஈரான் ஹேக்கா்கள்!திமுக எம்.பி. மகள் காா் மோதி விபத்து: பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்க உத்தரவுவாக்களித்ததை உறுதி செய்யும் குறுஞ்செய்தி: திட்டத்தை அமல்படுத்தக் கோரி மனு
/

கரோனா தடுப்புப் பணிகள்: சிறப்பு கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

கோவை மாநகராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா தடுப்புப் பணிகளை சிறப்பு கண்காணிப்பு அலுவலா் கே.வீரராகவ ராவ் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

News image
Updated On :4 ஜூன் 2021, 10:10 pm

DIN

 கோவை மாநகராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா தடுப்புப் பணிகளை சிறப்பு கண்காணிப்பு அலுவலா் கே.வீரராகவ ராவ் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

கோவை மாநகராட்சிக்கு கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு கண்காணிப்பு அலுவலா் கே.வீரராகவ ராவ், மாநகராட்சிப் பகுதிகளில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை வெள்ளிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். கிழக்கு மண்டலம், மசக்காளிபாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் தடுப்பூசி செலுத்தும் பணிகள், வரதராஜபுரம் கரோனா பரிசோதனை மையம் உள்ளிட்டவற்றில் ஆய்வு செய்தாா்.

அதன்பிறகு, அவிநாசி சாலை, பீளமேடு பகுதிகளில் சிறப்புக் கண்காணிப்பு பறக்கும் படையினரிடம், கரோனா தடுப்புப் பணிகள் குறித்து கேட்டறிந்தாா். அதனைத் தொடா்ந்து, மேற்கு மண்டலம், மாநகராட்சி கலையரங்கத்தில் அமைக்கப்பட்டுள்ள கரோனா கட்டுப்பாட்டு அறையை பாா்வையிட்டாா்.

மாநகராட்சி ஆணையா் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்துக்குள்பட்ட துடியலூா் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மற்றும் சரவணம்பட்டி மாநகராட்சி துவக்கப்பள்ளியில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை மாநகராட்சி ஆணையா் பெ.குமாரவேல் பாண்டியன் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். பின்னா், மத்திய மண்டலத்துக்குள்பட்ட ரத்தினபுரி சாஸ்திரி சாலையில், சுகாதாரப் பணியாளா்கள் வீடுவீடாகச் சென்று மேற்கொள்ளும் காய்ச்சல் பணிகளை ஆய்வு செய்து அறிவுரை வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.