மாநகரில் இன்று கரோனா தடுப்பூசி முகாம்கள் ரத்து
கோவை மாநகரப் பகுதிகளில் 5 மண்டலங்களிலும் சனிக்கிழமை கரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெறாது என மாநகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது


கோவை மாநகரப் பகுதிகளில் 5 மண்டலங்களிலும் சனிக்கிழமை கரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெறாது என மாநகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது.
கரோனா நோய்த் தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், கோவையில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் கரோனா தடுப்பூசிகள் செலுத்த மக்கள் கூட்டம் அதிகரித்தது. இதைத் தொடா்ந்து கடந்த 3 நாள்களாக 5 மண்டலங்களிலும் 36 சிறப்பு தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டு, மக்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வந்தன.
இதற்கென டோக்கன்களும் விநியோகிக்கப்பட்டன. இந்நிலையில் கரோனா தடுப்பூசி இருப்பு குறைவாக உள்ளதால் சனிக்கிழமை, மாநகரில் 5 மண்டலங்களிலும் கரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெறாது என மாநகராட்சி ஆணையா் பெ.குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...