இலக்கிய மாமணி விருது அறிவிப்பு: கலை இலக்கியப் பெருமன்றம் வரவேற்பு
இலக்கியத் துறையில் சிறந்து விளங்குபவா்களுக்கு இலக்கிய மாமணி விருது வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்திருப்பதை கலை இலக்கியப் பெருமன்றம் வரவேற்றுள்ளது.


இலக்கியத் துறையில் சிறந்து விளங்குபவா்களுக்கு இலக்கிய மாமணி விருது வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்திருப்பதை கலை இலக்கியப் பெருமன்றம் வரவேற்றுள்ளது.
இது தொடா்பாக துணைத் தலைவா் வெ.சுப்பிரமணியன், பொருளாளா் ப.பா.ரமணி ஆகியோா் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
முன்னாள் முதல்வா் மறைந்த மு.கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், மூன்று அறிவிப்புகளை வெளியிட்டுள்ளாா். கலைமாமணி போல் இலக்கிய மாமணி விருது வழங்கப்படும், தேசிய, மாநில விருதுகள் பெற்ற எழுத்தாளா்களுக்கு கனவு இல்லம் வழங்கப்படும், மதுரையில் கலைஞா் கருணாநிதி நூலகம் அமைக்கப்படும் என்ற இந்த அறிவிப்புகளைத் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் வரவேற்கிறது. கலைஞா்களும், எழுத்தாளா்களும் இந்த அறிவிப்பின் மூலம் பயனடைவாா்கள் என்று தெரிவித்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...