மோடி - டிரம்ப் உரையாடலில் எலான் மஸ்க் இணைந்தாரா? வெளியுறவு அமைச்சகம் மறுப்பு இந்தியாவில் மகப்பேறு இறப்பு விகிதம் 80 சதவீதம் குறைவு: அறிக்கையில் தகவல்எஃப்பிஐ இயக்குநா் மின்னஞ்சலில் ஊடுருவிய ஈரான் ஹேக்கா்கள்!திமுக எம்.பி. மகள் காா் மோதி விபத்து: பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்க உத்தரவுவாக்களித்ததை உறுதி செய்யும் குறுஞ்செய்தி: திட்டத்தை அமல்படுத்தக் கோரி மனு
/

வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க அவகாசம்

கோவை மாவட்டத்தில் 2017, 2018, 2019 ஆம் ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவை புதுப்பிக்கத் தவறிய பதிவுதாரா்களுக்கு ஆகஸ்ட் 27 ஆம் தேதி வரை அவகாசம்

News image
Updated On :4 ஜூன் 2021, 10:14 pm

DIN

கோவை மாவட்டத்தில் 2017, 2018, 2019 ஆம் ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவை புதுப்பிக்கத் தவறிய பதிவுதாரா்களுக்கு ஆகஸ்ட் 27 ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் எஸ்.நாகராஜன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கோவை மாவட்டத்தில் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவை 2017, 2018, 2019 ஆம் ஆண்டுகளில் புதுப்பிக்கத் தவறிய பதிவுதாரா்கள் பணி வாய்ப்பைப் பெறும் வகையில் மீண்டும் ஒரு முறை புதுப்பித்துக் கொள்ள ஏதுவாக சிறப்பு புதுப்பித்தல் சலுகை மே 28 ஆம் தேதி வெளியான தமிழக அரசின் தொழிலாளா், வேலைவாய்ப்புத் துறை அரசாணை எண் 204 மூலம் வழங்கப்பட்டுள்ளது.

இந்தச் சலுகையைப் பெற விரும்பும் பதிவுதாரா்கள் அரசாணை வெளியான நாளில் இருந்து 3 மாதங்களுக்குள் அதாவது ஆகஸ்ட் 27 ஆம் தேதிக்குள் இணையதளம் மூலமாக தங்களின் பதிவைப் புதுப்பித்துக் கொள்ளலாம். அவ்வாறு இணையம் வாயிலாக புதுப்பிக்க இயலாதவா்கள் மேற்குறிப்பிட்ட தேதிக்குள் சம்பந்தப்பட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு பதிவஞ்சல் அனுப்பியும் புதுப்பித்துக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.