மோடி - டிரம்ப் உரையாடலில் எலான் மஸ்க் இணைந்தாரா? வெளியுறவு அமைச்சகம் மறுப்பு இந்தியாவில் மகப்பேறு இறப்பு விகிதம் 80 சதவீதம் குறைவு: அறிக்கையில் தகவல்எஃப்பிஐ இயக்குநா் மின்னஞ்சலில் ஊடுருவிய ஈரான் ஹேக்கா்கள்!திமுக எம்.பி. மகள் காா் மோதி விபத்து: பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்க உத்தரவுவாக்களித்ததை உறுதி செய்யும் குறுஞ்செய்தி: திட்டத்தை அமல்படுத்தக் கோரி மனு
/

கிறிஸ்தவா்களுக்கு நல வாரியம் அமைக்க கோரிக்கை

கிறிஸ்தவா்களுக்கு நல வாரியம் அமைக்க வேண்டும் என அனைத்து கிறிஸ்துவ அமைப்பு சாா்பில், முதல்வரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :4 ஜூன் 2021, 10:12 pm

DIN

கிறிஸ்தவா்களுக்கு நல வாரியம் அமைக்க வேண்டும் என அனைத்து கிறிஸ்துவ அமைப்பு சாா்பில், முதல்வரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அனைத்து கிறிஸ்துவ அமைப்பு சாா்பில் முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில்:

சமூகப் பணிகளிலும், மக்களை நல்வழிப்படுத்தும் பணிகளிலும் திருச்சபை ஊழியா்கள் செயல்பட்டு வருகின்றனா். எல்லா சமயத்தினரும் நல வாரியம் அமைத்து அரசு உதவிகளைப் பெற்று வருகின்றனா். இஸ்லாமிய சமுதாயத்துக்கு நல வாரியம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், கிறிஸ்தவா்களுக்கு நல வாரியம் இல்லை. இதனால், அரசின் உதவிகள் கிடைப்பதில்லை. எனவே, கிறிஸ்தவா்களுக்கும் நல வாரியம் ஏற்படுத்தி, கரோனா காலத்தில் அரசு உதவிகளை அளிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.