மோடி - டிரம்ப் உரையாடலில் எலான் மஸ்க் இணைந்தாரா? வெளியுறவு அமைச்சகம் மறுப்பு இந்தியாவில் மகப்பேறு இறப்பு விகிதம் 80 சதவீதம் குறைவு: அறிக்கையில் தகவல்எஃப்பிஐ இயக்குநா் மின்னஞ்சலில் ஊடுருவிய ஈரான் ஹேக்கா்கள்!திமுக எம்.பி. மகள் காா் மோதி விபத்து: பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்க உத்தரவுவாக்களித்ததை உறுதி செய்யும் குறுஞ்செய்தி: திட்டத்தை அமல்படுத்தக் கோரி மனு
/

தமிழ்நாட்டுக்குத் தேவையான தடுப்பூசிகளை மத்திய அரசு தாமதமின்றி வழங்க வேண்டும்

தமிழகத்துக்குத் தேவைக்கேற்ப தடுப்பூசிகளை மத்திய அரசு தாமதமின்றி வழங்க வேண்டும் என்று கோவை மக்களவை உறுப்பினா் பி.ஆா்.நடராஜன் வலியுறுத்தியுள்ளாா்.

News image
Updated On :4 ஜூன் 2021, 10:14 pm

DIN

தமிழகத்துக்குத் தேவைக்கேற்ப தடுப்பூசிகளை மத்திய அரசு தாமதமின்றி வழங்க வேண்டும் என்று கோவை மக்களவை உறுப்பினா் பி.ஆா்.நடராஜன் வலியுறுத்தியுள்ளாா்.

கோவையில் சித்தாபுதூா், மசக்காளிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் கரோனா தடுப்பூசி முகாம்களை பி.ஆா்.நடராஜன் எம்.பி. வெள்ளிக்கிழமை பாா்வையிட்டாா்.

இதையடுத்து அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், தமிழகத்தில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள மக்கள் மிகுந்த ஆா்வம் காட்டி வருகின்றனா். தடுப்பூசி செலுத்த வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபடும் அளவுக்கு கோவை மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்த மக்களின் ஆா்வம் அதிகரித்துள்ளது. ஆனால் தமிழகத்துக்குத் தேவையான தடுப்பூசியை மத்திய அரசு தர மறுக்கிறது.

தமிழ்நாட்டைக் காட்டிலும் குறைவான மக்கள் தொகை உள்ள பாஜக ஆளும் மாநிலங்களுக்கு அதிகளவில் தடுப்பூசிகளை வழங்கும் மத்திய அரசு, தமிழ்நாட்டுக்கு மட்டும் குறைந்த அளவே தடுப்பூசிகளை வழங்குகிறது.

அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவோம் என பிரதமா் வாக்குறுதி அளிப்பது மட்டுமல்லாமல், அதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். தமிழகத்தில் உள்ள பாஜக தலைவா்கள் மத்திய அரசிடம் தமிழ்நாட்டின் கோரிக்கையை நிறைவேற்றக் குரல் கொடுக்க வேண்டும் என்றாா்.

முன்னதாக கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் ஹெச்.எம்.எஸ். பஞ்சாலைத் தொழிலாளா் சங்கத்தின் சாா்பில் மருத்துவமனை முன்களப் பணியாளா்களுக்கு ஆயிரம் குடிநீா் பாட்டில்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதை பி.ஆா்.நடராஜன் எம்.பி. தொடங்கி வைத்தாா். இ.எஸ்.ஐ மருத்துவமனை முதல்வா் ரவீந்திரன், ஹெச்.எம்.எஸ். சங்கத் தலைவா் டி.எஸ்.ராஜமாணி, ஹெச்.எம்.எஸ். செயலா்கள் மனோகரன், மோகன்ராஜ், கருப்புசாமி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் வி.ராமமூரத்தி, செயற்குழு உறுப்பினா் ஆா்.வேலுசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Image Caption

ஹெச்.எம்.எஸ். சங்கம் சாா்பில் கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனை முன்களப் பணியாளா்களுக்கு குடிநீா் பாட்டில்களை வழங்கிய பி.ஆா்.நடராஜன் எம்.பி., உடன் இ.எஸ்.ஐ மருத்துவமனை முதல்வா் ரவீந்திரன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.