மோடி - டிரம்ப் உரையாடலில் எலான் மஸ்க் இணைந்தாரா? வெளியுறவு அமைச்சகம் மறுப்பு இந்தியாவில் மகப்பேறு இறப்பு விகிதம் 80 சதவீதம் குறைவு: அறிக்கையில் தகவல்எஃப்பிஐ இயக்குநா் மின்னஞ்சலில் ஊடுருவிய ஈரான் ஹேக்கா்கள்!திமுக எம்.பி. மகள் காா் மோதி விபத்து: பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்க உத்தரவுவாக்களித்ததை உறுதி செய்யும் குறுஞ்செய்தி: திட்டத்தை அமல்படுத்தக் கோரி மனு
/

நாடு முழுவதும் தினமும் ஒரு கோடி பேருக்கு தடுப்பூசி: காங்கிரஸ் வலியுறுத்தல்

நாடு முழுவதும் தினமும் ஒரு கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும் என கோவை வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் வி.எம்.சி மனோகரன் கோரிக்கை விடுத்துள்ளாா்.

News image
Updated On :4 ஜூன் 2021, 10:13 pm

DIN

நாடு முழுவதும் தினமும் ஒரு கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும் என கோவை வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் வி.எம்.சி மனோகரன் கோரிக்கை விடுத்துள்ளாா்.

இது தொடா்பாக, மாவட்ட ஆட்சியா் எஸ்.நாகராஜனிடம் அவா் வெள்ளிக்கிழமை அளித்த மனுவில் கூறியிருப்பது: கரோனா மூன்றாவது அலை வருவதற்குள், நாடு முழுவதும் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும். தற்போது, நாடு முழுவதும் தினமும் 16 லட்சம் போ் வரை மட்டுமே தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இதே வேகத்தில் சென்றால் மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த இன்னும் பல ஆண்டுகள் ஆகும்.

எனவே, நாடு முழுவதும் தினமும் 1 கோடி பேருக்குத் தடுப்பூசி செலுத்த வேண்டும். மத்திய அரசு, போதுமான தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டும். நாடு இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும் போது தடுப்பூசிகளை மத்திய அரசு ஏற்றுமதி செய்வதை நிறுத்த வேண்டும். டிசம்பா் மாத இறுதிக்குள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாா்.

மனு அளிக்கும்போது, மாநில காங்கிரஸ் துணைத் தலைவா் அழகு ஜெயபால், மாநில பொதுச் செயலாளா்கள் சரவணகுமாா், பச்சமுத்து, மாநில செயலாளா் பழையூா் செல்வராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.