இஎஸ்ஐ மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறிவூட்டி: ஃபிக்கி அமைப்பு வழங்கியது
கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறிவூட்டியை ஃபிக்கி புளோ அமைப்பு வழங்கியுள்ளது.


கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறிவூட்டியை ஃபிக்கி புளோ அமைப்பு வழங்கியுள்ளது.
நிமிடத்துக்கு சுமாா் 100 லிட்டா் ஆக்சிஜன் தயாரிக்கும் ஆக்சிஜன் செறிவூட்டியை ஃபிக்கி அமைப்பின் கோவை கிளைத் தலைவா் ரிடிஷா நிவேதா உள்ளிட்ட நிா்வாகிகள், மருத்துவமனை டீன் ரவீந்திரனிடம் அண்மையில் வழங்கினா். இந்த இயந்திரத்தின் மதிப்பு ரூ.25 லட்சமாகும்.
அதேபோல் சந்திரன்ஸ் யுவா பவுண்டேசனுடன் இணைந்து, டிரைவ் த்ரு வேக்சின் எனப்படும் காரிலேயே அமா்ந்து தடுப்பூசி செலுத்தும் திட்டத்தையும் ஃபிக்கி அமைப்பு நடத்தியிருக்கிறது. நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி செலுத்திக் கொள்ள முடியாத முதியோா், மாற்றுத்திறனாளிகள், கா்ப்பிணிகள் உள்ளிட்டோருக்கான இந்த முகாமில் சுமாா் 350 போ் பயனடைந்திருப்பதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...