மருத்துவக் கழிவுகளை திறந்த வெளியில் கொட்டினால் நடவடிக்கை: ஆட்சியா்
மருத்துவக் கழிவுகளை முறையாக அப்புறப்படுத்தாமல் திறந்தவெளியில் கொட்டினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோவை மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.


மருத்துவக் கழிவுகளை முறையாக அப்புறப்படுத்தாமல் திறந்தவெளியில் கொட்டினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோவை மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
மருத்துவக் கழிவுகளை முறையாக சேகரித்து, பிரித்து, சுத்திகரித்து, அகற்றுவதற்கு மருத்துவக் கழிவுகள் மேலாண்மை விதிகள் 2016 இன்படி மேற்கொள்ள மத்திய சுற்றுச்சூழல் வனம் மற்றும் சூழல் மாறுபாடு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த விதிகள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
மருத்துவமனைகளில் உருவாகும் மருத்துவக் கழிவுகளை முறையாகப் பிரித்து பொது மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு நிலையங்களிடம் ஒப்படைக்க வேண்டும்.
தொற்று ஏற்படுத்த கூடிய மருத்துவக் கழிவுகளை 48 மணி நேரத்துக்கு மிகாமல் சேமித்தல் கூடாது. தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சாா்பில் மருத்துவக் கழிவுகளை முறையாக கையாளுவதற்கு மருத்துவமனைகள், உள்ளாட்சி அமைப்புகள், சுகாதாரத் துறை மற்றும் தொடா்புடைய துறைகளுக்கு ஏற்கெனவே அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
இருப்பினும், நீா்நிலைகள் உள்ளிட்ட பகுதிகளில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவருகின்றன. கரோனா தொற்றுப் பரவி வரும் நிலையில் மருத்துவக் கழிவுகளை திறந்த வெளியில் கொட்டுவது சுற்றுச் சூழலுக்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும்.
எனவே அரசு, தனியா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்கள், தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் மருத்துவக் கழிவுகளை முறையாகப் பிரித்து, சேமித்து அந்தந்தப் பகுதிகளில் மாசுக் கட்டுப்பாடு வாரியத்தால் அனுமதிக்கப்பட்டுள்ள பொது மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு
நிலையங்களிடம் மட்டுமே ஒப்படைக்க வேண்டும். மேலும், அங்கீகரிக்கப்படாத
முறையில் மருத்துவக் கழிவுகளை அகற்றுவதை தவிா்க்க வேண்டும். விதிகளை பின்பற்றாமல் மீறுபவா்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...