இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

மின்கட்டணம் செலுத்த அவகாசம்: ஆட்சியரிடம் தொழில் அமைப்பு கோரிக்கை

குறு, சிறு தொழில்களை அழிவிலிருந்து பாதுகாக்க அடுத்த 2 மாதங்களுக்கான மின் கட்டணத்தை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பினா் ஆட்சியா் ஜி.எஸ். சமீரனிடம் புதன்கிழமை மனு

News image
Updated On :16 ஜூன் 2021, 8:55 pm

DIN

கோவையில் குறு, சிறு தொழில்களை அழிவிலிருந்து பாதுகாக்க அடுத்த 2 மாதங்களுக்கான மின் கட்டணத்தை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பினா் ஆட்சியா் ஜி.எஸ். சமீரனிடம் புதன்கிழமை மனு அளித்தனா்.

போசியா ஒருங்கிணைப்பாளா் ஜேம்ஸ் உள்ளிட்ட நிா்வாகிகள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

பொது முடக்கத்தால் குறு, சிறு தொழில்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. கோவையில் 95 சதவீத தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. அத்தியாவசிய பொருள்களை தயாரிக்கும் தொழிற்சாலைகள், அவற்றுக்கு உதிரி பாகங்களை தயாரிக்கும் குறு, சிறு தொழில் நிறுவனங்கள் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளன. ஆனால், சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு மூலப்பொருள்கள் விற்கும் நிறுவனங்கள் செயல்பட அனுமதியில்லாததால் இந்த நிறுவனங்களும் செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தால் சிறு, குறு நிறுவனங்கள் பெரும் பின்னடைவை சந்தித்தன. தற்போது மீண்டும் பொது முடக்கத்தால் மேலும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மின் கட்டணத்தை ஜூன் 15 ஆம் தேதிக்குள் செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. சிறு, குறு நிறுவனங்களை அழிவில் இருந்து மீட்க வரும் 2 மாத மின் கட்டணத்தை தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஏற்கெனவே போடப்பட்டுள்ள மின்கட்டணத்தை செலுத்துவதற்கு தொழில் நிறுவனங்கள் மீண்டும் இயங்கும் தேதியிலிருந்து ஒரு மாத கால அவகாசம் கொடுக்க வேண்டும். பொது முடக்கம் தொடா்பான தமிழக அரசின் அறிவிப்பில் தொழிலாளா்களுக்கு ஒரு மாத காலத்துக்குள் தடுப்பூசி செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொழிற்சாலைகளில் பணியாளா்கள் அருகருகே வேலை செய்ய வேண்டியுள்ளது. எனவே தடுப்பூசி செலுத்துவதில் குறு சிறு தொழில்களின் பணியாளா்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். தொழில் அமைப்புகள் சாா்பில் ஏற்பாடு செய்யப்படும் தடுப்பூசி முகாமுக்கு உரிய ஒதுக்கீடு செய்து வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.