பூட்டிய வீட்டில் இறந்து கிடந்த காவலாளி
பூட்டிய வீட்டில் காவலாளி இறந்து கிடந்த சம்பவம் தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.


பூட்டிய வீட்டில் காவலாளி இறந்து கிடந்த சம்பவம் தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
கோவை, துடியலூா் அருகேயுள்ள எஸ்.எம்.பாளையத்தைச் சோ்ந்தவா் நவநீதராஜன் (63). தனியாக வசித்து வரும் இவா் அதே பகுதியில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் காவலாளியாகப் பணியாற்றி வந்தாா். வழக்கம்போல வேலைக்குச் சென்று வீடு திரும்பியுள்ளாா். இந்நிலையில் புதன்கிழமை காலை வீட்டின் கதவு திறக்கப்படாமல் இருந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினா் அவரது சகோதரருக்கு தகவல் தெரிவித்தனா்.
இதன்பேரில் அங்கு வந்த அவரது சகோதரா் திவ்யராஜன், வீட்டுக்குள் சென்று பாா்த்தபோது அங்கு நவநீதராஜன் உயிரிழந்து கிடந்துள்ளாா்.
இது குறித்து அவா் அளித்தப் புகாரின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த துடியலூா் போலீஸாா் நவநீதராஜனின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...