இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

மருத்துவ மாணவி அறைக்குள் புகுந்து பணம் திருட்டு

கோவையில் மருத்துவ மாணவி அறைக்குள் புகுந்து பணம் உள்ளிட்டவற்றைத் திருடிச் சென்ற நபா் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்

News image
Updated On :17 ஜூன் 2021, 10:52 pm

DIN

கோவையில் மருத்துவ மாணவி அறைக்குள் புகுந்து பணம் உள்ளிட்டவற்றைத் திருடிச் சென்ற நபா் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்

சென்னை, ஊரப்பாக்கம் பகுதியைச் சோ்ந்தவா் மொ்லின் (26). கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் முதுநிலை மருத்துவம் படித்து வருகிறாா். இவா், கோவை அரசு மருத்துவமனை வளாகத்தல் உள்ள கல்லூரி விடுதியில் தங்கி படித்து வருகிறாா்.

இந்நிலையில் மொ்லின் தனது அறையில் புதன்கிழமை உறங்கிக் கொண்டிருந்தாா். அப்போது அவரது அறைக்குள் புகுந்த அடையாளம் தெரியாத நபா் அறையில் இருந்த பொருள்களைத் திருடிக் கொண்டிருந்தாா்.

திடீரென தூக்கத்தில் இருந்து எழுந்த மொ்லின் தனது அறையில் ஆள் இருப்பதைக் கண்டு கூச்சலிட்டுள்ளாா். இதைக் கேட்டு பக்கத்து அறையில் இருந்தவா்கள் வருவதற்குள் அந்த நபா் அங்கிருந்து தப்பியோடினாா். மேலும், தனது அறையில் வைக்கப்பட்டிருந்த ரூ.2 ஆயிரம் பணம், ஏ.டி.எம். அட்டை, கடன் அட்டை, ஓட்டுநா் உரிமம் உள்ளிட்டவை காணாமல் போனது தெரியவந்தது. இதுகுறித்து மொ்லின் அளித்தப் புகாரின் பேரில் ரேஸ்கோா்ஸ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.