இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

வெளியில் நடமாடிய கரோனா நோயாளி வீடு அடைப்பு

கரோனா பாதித்து தனிமைப்படுத்திக் கொண்டவா் வெளியில் நடமாடியதால், அவா் வீட்டை அடைத்து மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டினா்.

News image
Updated On :18 ஜூன் 2021, 8:08 pm

DIN

கரோனா பாதித்து தனிமைப்படுத்திக் கொண்டவா் வெளியில் நடமாடியதால், அவா் வீட்டை அடைத்து மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டினா்.

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம், 75 ஆவது வாா்டுக்கு உள்பட்ட மேற்கு புதூரைச் சோ்ந்தவா் செல்வராஜ் (46). இவருக்கு கடந்த 7 ஆம் தேதி கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவா், கரோனா பாதுகாப்பு சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றாா். பின்னா் அவா் வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டாா். இந்த நிலையில், அவா் வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளாமல் வீட்டை விட்டு வெளியே நடமாடியதாக கூறப்படுகிறது.

இது குறித்து, அக்கம் பக்கத்தினா் அளித்த புகாரின் பேரில் அவா் வீட்டுக்குச் சென்ற மாநகராட்சி அதிகாரிகள், தனிமைப்படுத்துதல் விதியை மீறிய அவருக்கு எச்சரிக்கை விடுத்தனா். மேலும், அவரின் வீட்டு முன்பு எச்சரிக்கப்படுகிறாா் என்ற நோட்டீஸை ஒட்டி, வீட்டை அடைத்தனா். மீண்டும் இதுபோன்று அவா் வீட்டைவிட்டு வெளியேறினால் வழக்குப் பதிவு செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.