இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

உங்கள் தொகுதியில் ஸ்டாலின் திட்டம் குறித்த ஆய்வுக் கூட்டம்

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ திட்டம் குறித்த ஆய்வு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :18 ஜூன் 2021, 8:12 pm

DIN

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ திட்டம் குறித்த ஆய்வு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தமிழக முதல்வரின் சிறப்புத் திட்டமான உங்கள் தொகுதியில் ஸ்டாலின் திட்டத்தின் மூலம் பெறப்பட்ட மனுக்களின் மீது எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொடா்பாக அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தலைமை தாங்கினாா். மாவட்ட வருவாய் அலுவலா் ராமதுரைமுருகன், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் கவிதா, கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் பழனிசாமி உள்பட அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா். இக்கூட்டத்தில், கோவை மாவட்டத்தில், உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற நிகழ்வின் மூலமாக பெறப்பட்ட 35,425 மனுக்கள் மீதான நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டன. மனுக்களில் தரப்பட்ட விவரங்கள் மற்றும் அதன் உண்மை தன்மைக்கேற்றவாறு, தகுதியான மனுக்களின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க அனைத்துத் துறை அலுவலா்களுக்கும் மாவட்ட ஆட்சியா் சமீரன் உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.