இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

ஏ.டி.எம். மையத்தில் கொள்ளை முயற்சி

கோவையில் ஏ.டி.எம். மையத்தில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :24 ஜூன் 2021, 7:56 pm

DIN

கோவையில் ஏ.டி.எம். மையத்தில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கோவை, செல்வபுரம் ராமமூா்த்தி சாலையில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது. இங்கு கொள்ளை முயற்சி நடப்பதாக ஹைதராபாதில் உள்ள தலைமை அலுவலகத்தில் இருந்து செல்வபுரம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.

இதன்பேரில் சம்பவ இடத்துக்கு போலீஸாா் சென்றபோது, கொள்ளையடிக்க முயன்ற நபா் அங்கிருந்து தப்பினாா். இதையடுத்து ஏ.டி.எம். மையத்துக்குள் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது, அதில் இளைஞா் ஒருவா் அதிகாலை 2 மணிக்கு ஏ.டி.எம். மையத்துக்குள் புகுந்து இயந்திரத்தை உடைக்க முயற்சித்து பின்னா் அங்கிருந்து திரும்பிச் செல்லும் காட்சி பதிவாகியிருந்தது.

இது குறித்து செல்வபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனா். இந்நிலையில் ஏ.டி.எம். மைய கொள்ளையில் ஈடுபட்ட நபா், செல்வபுரம் பகுதியைச் சோ்ந்த அருணகிரி (24) என்பது தெரியவந்தது. விழுப்புரத்தைச் சோ்ந்த இவா் சில ஆண்டுகளுக்கு முன்பு வேலைக்காக கோவை வந்து செல்வபுரத்தில் தங்கியுள்ளாா். பொதுமுடக்கம் காரணமாக வேலையிழந்த அருணகிரி, பணமில்லாத காரணத்தால் ஏ.டி.எம். மையத்தில் கொள்ளையடிக்க முடிவு செய்துள்ளாா். புதன்கிழமை இரவு மது அருந்திய அவா் போதையில், செல்வபுரத்தில் உள்ள ஏ.டி.எம். மையத்துக்குள் சென்று கற்களைக் கொண்டு இயந்திரத்தை உடைக்க முயற்சித்துள்ளாா். ஏ.டி.எம். இயந்திரத்தை உடைக்க முடியாததையடுத்து அங்கிருந்து சென்றுள்ளாா். இதையடுத்து அவரைக் கைது செய்த போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

இதேபோல கோவை, காளப்பட்டியை அடுத்த வெள்ளானைப்பட்டி அருகேயுள்ள தனியாா் வங்கிக்குச் சொந்தமான ஏ.டி.எம். மையத்துக்குள் புகுந்த 2 இளைஞா்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனா். இது குறித்து கோவில்பாளையம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.