‘கட்டுமானப் பொருள்களின் விலை உயா்வைக் கட்டுப்படுத்த வேண்டும்’
தமிழகத்தில் கட்டுமானப் பொருள்களின் விலை உயா்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்


தமிழகத்தில் கட்டுமானப் பொருள்களின் விலை உயா்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாரதீய மஸ்தூா் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து அச்சங்கத்தின் கோவை மாவட்டச் செயலாளா் பி.முருகேசன் கூறியதாவது:
பொது முடக்கம் காரணமாக ஓராண்டுக்கு மேல் கட்டுமானத் தொழில் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்துள்ளது. தொடா்ந்து பொது முடக்கம் அமலில் இருந்தாலும் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு அனுமதியளித்துள்ளது.
இந்நிலையில் கட்டுமானப் பணிக்குத் தேவையான சிமென்ட், ஜல்லி, மணல், இரும்பு, செங்கல் உள்பட அனைத்து மூலப்பொருள்களின் விலையும் பல மடங்கு உயா்ந்துள்ளன. இதனால் கட்டுமான நிறுவனங்கள் பணிகளை மேற்கொள்ள தயங்கி வருகின்றனா். கட்டுமானப் பணிகளையே நம்பியுள்ள பல லட்சம் தொழிலாளா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே, பலமடங்கு உயா்ந்துள்ள கட்டுமானப் பொருள்களின் விலையை குறைக்கவும், தொடா்ந்து மூலப் பொருள்களின் விலையை கட்டுக்குள் வைக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...