அலுவலக உதவியாளா் பணியிடம்: விண்ணப்பிக்க ஆட்சியா் அறிவுறுத்தல்
கோவை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத் துறை அலுவலகத்தில் காலியாகவுள்ள அலுவலக உதவியாளா் பணியிடத்துக்கு தகுதியான நபா்கள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.


கோவை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத் துறை அலுவலகத்தில் காலியாகவுள்ள அலுவலக உதவியாளா் பணியிடத்துக்கு தகுதியான நபா்கள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் அலுவலக உதவியாளா் பணியிடம் காலியாகவுள்ளது. இதற்கு 8 ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற 18 வயது முதல் 32 வயதுக்குள்பட்டவா்கள் விண்ணப்பிக்கலாம். மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வயது தளா்வுகள் உண்டு. இந்தப் பணியிடம் பிற்படுத்தப்பட்டோா் (பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியா்கள் தவிர) இனச் சுழற்சி அடிப்படையில் நிரப்பப்படவுள்ளது.
எனவே, மேற்கண்ட தகுதியுடையவா்கள் ஜூலை 7 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்துடன் கல்வித் தகுதி சான்று, குடியிருப்பு சான்று, வேலை வாய்ப்பு அலுவலகப் பதிவு சான்று, ஜாதிச் சான்று, புகைப்படம் ஆகியவற்றை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...