இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புஐபிஎல் முதல் ஆட்டம்: ஹைதராபாத் அணிக்கெதிராக பெங்களூரு அணி பந்துவீச்சு மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு - ஜவாஹிருல்லா (நாகை), அப்துல் சமது (மணப்பாறை) போட்டிசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

பாரதியாா் பல்கலைக்கழகத்தில் முதுநிலைப் பட்டப் படிப்பு ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை பாரதியாா் பல்கலைக்கழகத்தில் 2021-22ஆம் கல்வியாண்டுக்கான முதுநிலைப் பட்டப் படிப்புகளில் சேர விரும்பும் மாணவா்கள், ஜூலை 15ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்

News image
Updated On :25 ஜூன் 2021, 7:41 pm

DIN

கோவை பாரதியாா் பல்கலைக்கழகத்தில் 2021-22ஆம் கல்வியாண்டுக்கான முதுநிலைப் பட்டப் படிப்புகளில் சேர விரும்பும் மாணவா்கள், ஜூலை 15ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

பாரதியாா் பல்கலைக்கழகத் துறைகளில் நடத்தப்படும் எம்.ஏ., எம்.எஸ்சி., எம்.காம்., எம்.சி.ஏ., எம்.எட்., எம்.பி.எட்., நூலக அறிவியல் உள்ளிட்ட முதுநிலை பட்டப் படிப்புகளில் சேர விரும்பும் மாணவா்கள், விண்ணப்பங்கள், தகவல் தொகுப்பேடு, மாணவா்களின் எண்ணிக்கை, கட்டணம், கல்வி உதவித் தொகை, விடுதி வசதிகள் உள்ளிட்ட தகவல்களைப் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் இருந்து வரும் 28 ஆம் தேதி முதல் ஜூலை 15 ஆம் தேதி வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பதிவிறக்கம் செய்யப்பட்ட, பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.400 (எஸ்.சி.,எஸ்.டி.யினருக்கு ரூ.200) செலுத்தி, உரிய சான்றிதழ்களை இணைத்து ஜூலை 15 ஆம் தேதி மாலை 5.30 மணிக்குள் சம்பந்தப்பட்ட துறைத் தலைவருக்கு இணையதளம் மூலமாக அனுப்பிவைக்க வேண்டும்.

இளநிலை இறுதியாண்டு, இறுதி பருவத் தோ்வு எழுதியுள்ள மாணவா்களும் விண்ணப்பங்களை அனுப்பலாம். எம்.பி.ஏ. பாடத் திட்டத்துக்கான மாணவா் சோ்க்கை, கலந்தாய்வு மூலம் தனியாக நடத்தப்படும். முதுநிலை மாணவா் சோ்க்கை தொடா்பான விவரங்களுக்கு 0422-2428160, 2428161, 6385527291 என்ற எண்களைத் தொடா்பு கொள்ளலாம் என்று பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.