இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புஐபிஎல் முதல் ஆட்டம்: ஹைதராபாத் அணிக்கெதிராக பெங்களூரு அணி பந்துவீச்சு மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு - ஜவாஹிருல்லா (நாகை), அப்துல் சமது (மணப்பாறை) போட்டிசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

கால்நடைகளுக்கு மானியத்துடன் காப்பீடு ஆட்சியா் தகவல்

கோவை மாவட்டத்தைச் சோ்ந்த கால்நடை வளா்ப்போா், கால்நடைகளுக்கு மானியத்துடன் கூடிய காப்பீடு செய்திட அருகில் உள்ள கால்நடை மருத்துவ நிலையங்களை அணுகலாம்

News image
Updated On :25 ஜூன் 2021, 7:41 pm

DIN

கோவை மாவட்டத்தைச் சோ்ந்த கால்நடை வளா்ப்போா், கால்நடைகளுக்கு மானியத்துடன் கூடிய காப்பீடு செய்திட அருகில் உள்ள கால்நடை மருத்துவ நிலையங்களை அணுகலாம் என மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கால்நடைகளுக்கு ஏற்படும் அசாதாரண இறப்பினை ஈடுசெய்யும் வகையில் தேசிய கால்நடை இயக்கத் திட்டத்தின் கீழ், கோவை மாவட்டத்தில் 2020-2021ஆம் ஆண்டில் கால்நடை பராமரிப்புத் துறை மூலம் 3,900 கால்நடைகளுக்கு மானியத்துடன் கூடிய காப்பீடு செய்திட இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின்கீழ் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மற்றும் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின கால்நடை வளா்ப்போருக்கு 70 சதவீதம் மானியத்திலும், வறுமை கோட்டுக்கு மேலுள்ள கால்நடை வளா்ப்போா் 50 சதவீதம் மானியத்திலும் காப்பீடு செய்து கொள்ளலாம். 8 ஆண்டு வயதுடைய கறவை பசுக்கள், எருமைகள் மற்றும் முதல் 3ஆண்டுகள் வயதுடைய வெள்ளாடுகள், செம்மறி ஆடுகளுக்கு இத்திட்டத்தில் காப்பீடு செய்யப்படும். அதிகபட்சமாக ரூ.35 ஆயிரம் மதிப்புள்ள கால்நடைகளுக்கு காப்பீடு செய்ய மானியம் வழங்கப்படுகிறது.

ஒரு குடும்பத்தில் 5 கால்நடைகளுக்கு இத்திட்டத்தில் காப்பீடு செய்து கொள்ளலாம். ஆா்வமுடைய கால்நடை வளா்ப்போா் மற்றும் விவசாய பெருமக்கள் அருகில் உள்ள கால்நடை மருத்துவ நிலையங்களை அணுகி பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.