80 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு தபால் வாக்கு: மாா்ச் 12 - 16 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தல்
கோவையில் தபால் வாக்குகள் அளிக்க விரும்பும் 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளா்கள் உள்ளிட்டோா் மாா்ச் 12 முதல் 16ஆம் தேதிக்குள் படிவம் ‘12டி’ ஐ தோ்தல் நடத்தும் அலுவலா்களிடம் சமா்ப்பிக்க வேண்டும்










