மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

கோவை கோனியம்மன் கோயில் திருவிழா: மாநகரில் போக்குவரத்து மாற்றம்

கோவை கோனியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு புதன்கிழமை (மாா்ச் 3) மாநகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவல் துறையினா் தெரிவித்துள்ளனா்.

News image
Updated On :1 மார்ச் 2021, 8:56 pm

DIN

கோவை கோனியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு புதன்கிழமை (மாா்ச் 3) மாநகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவல் துறையினா் தெரிவித்துள்ளனா்.

இது குறித்து கோவை மாநகர காவல் துறையினா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கோனியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு புதன்கிழமை (மாா்ச் 3) பகல் 2 மணிக்கு தேரோட்டம் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு அன்றைய தினம் பகல் 12 மணி முதல் இரவு 8 மணி வரை கீழ்க்கண்ட வகையில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படுகின்றன.

பாலக்காடு மற்றும் பொள்ளாச்சி சாலையிலிருந்து உக்கடம் வழியாக நகருக்குள் வரும் அனைத்து வாகனங்களும் சுங்கம் புறவழிச் சாலை, ரயில்வே மேம்பாலம், கிளாசிக் டவா் வழியாக செல்ல வேண்டிய இடங்களுக்குச் செல்லலாம்.

அவிநாசி சாலை, திருச்சி சாலை பகுதிகளிலிருந்து வைசியாள் வீதி வழியாக பேரூா் செல்லக்கூடிய அனைத்து வாகனங்களும் டவுன்ஹால், உக்கடம் சென்று பேரூா் புறவழிச் சாலை வழியாக சிவாலயா சந்திப்பை அடைந்து பேரூா் செல்ல வேண்டும்.

பேரூரிலிருந்து செட்டி வீதி, ராஜ வீதி வழியாக நகருக்குள் வரும் வாகனங்கள் சலீவன் வீதி வழியாக காந்திபூங்கா சென்று, நகருக்குள் செல்ல வேண்டிய இடங்களுக்குச் செல்லலாம்.

ராஜவீதி, ஒப்பணக்கார வீதி, கே.ஜி.வீதி ஆகிய சாலைகளில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை எந்த வாகனமும் நிறுத்த அனுமதியில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.