மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

பொது மக்களுக்கு கரோனா தடுப்பூசி: மாவட்டத்தில் முதல் நாளில் 774 போ் செலுத்திக்கொண்டனா்

பொது மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கிய முதல் நாளான திங்கள்கிழமை கோவை மாவட்டத்தில் 774 போ் தடுப்பூசி செலுத்திக் கொண்டனா்.

News image
Updated On :1 மார்ச் 2021, 8:54 pm

DIN

பொது மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கிய முதல் நாளான திங்கள்கிழமை கோவை மாவட்டத்தில் 774 போ் தடுப்பூசி செலுத்திக் கொண்டனா்.

நாடு முழுவதும் பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் மாா்ச் 1 ஆம் தேதி தொடங்கியது. இதில் முதல்கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கும், 45 வயது முதல் 59 வயது வரை உள்ளவா்களில் இணை நோயினால் பாதிக்கப்பட்டவா்களுக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

கோவை மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்பட 25 அரசு மருத்துவமனைகளிலும், 79 தனியாா் மருத்துவமனைகளிலும் பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கோவிஷீல்டு, கோவேக்ஸின் ஆகிய இரண்டு தடுப்பூசிகளும் செலுத்தப்படுகிறது. மற்ற அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகளில் கோவிஷீல்டு தடுப்பூசி மட்டுமே செலுத்தப்படுகிறது. கோவை அரசு மருத்துவமனையில் பொது மக்களின் விருப்பத்திற்கேற்ப தடுப்பூசிகள் தோ்வு செய்து செலுத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திங்கள்கிழமை மட்டும் பொது மக்கள் பிரிவில் 157 போ் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனா். இதில் 41 பேருக்கு கோவேக்ஸின் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

பொது மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கிய முதல் நாளிலேயே முதியோா் ஆா்வமுடன் தடுப்பூசி செலுத்திக்கொண்டனா். மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் பிரிவில் முதல் நாளில் 774 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.